பக்கம்:பாரதியம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தம். சில சமயங்களில் மீள்போக்கு வெறும் பண்டித மதமாக மாறிவிடும் அபாயமும் உண்டு, தேசியம்பழமை குறித்த தீவிரமான நினைவுகளால் பழமைக்கு மீள் உணர்வின் @ສລarບໍ່ பெருக்கைத் திறந்து விடுகின்றது. செந்நெறி இலக்கியம், புராணக் கதைகள், வரலாறு முதலியவற்றிலிருந்து வனைந்தெடுக்கப்பட்ட கருதது உருவங்களையும், குறியீடுகளையும் புனைவியல் பாங்குடனும் மிகை உணர்வுடனும் தூண்டி விடுகின்றது... இரண்டாவதாக ցի திருத்தத்தை நோக்கி மிகப்பெரும் ஆற்றலைச் செலுத்துவதிலும் தேசிய உணர்வு செயல் திறனுடையது. இந்தத் சீர்திருத்தமானது மெல்லிய விடுதலைக் கீதமாகவே, அல்லது பயங்கரப் புரட்சி வடிவத்திலோ வெளியாகலாம்' இக்கூரிய உண்மை பாரதி வள்ளத்தோள் இருவருக்கும் பொருந்தும். பழமையை நோக்கி மீள் போக்கில் தொடங்கி தடைகள் பல தாண்டி சமூக சித்திருத்தப் பாதையில் இவர்கள் கவிதை பயணிக்கலாயிற்று. அன்னியக் கலாச்சார ஆதிக்கத்தைக் களையவும், சொந்த நாட்டின் சமூகக் கொடுமைகளை நீக்கவுமாக இரு முனைகளில் சமூக சீர்திருத்தக் கவிதைகள் போரிட வேண்டியிருந்தது. நாட்டு விடுதலை என்பது மொழி விடுதலை, கல்வி விடுதலை, சாதி விடுதலை அனைத்தையும் உள்ளடக்கியது என்பதைப் பாரதி தெளிவாக உணர்ந்திருந்தார். அவருடைய சுதந்திரப்பள்ளு என்ற கவிதையில் சாதி உணர்விலிருந்தும், சுரண்டலிலிருந்தும், அடிமைத்தனத்தி லிருந்தும் முழுமையாகப் பெறும் விடுதலையே 'ஆனந்த சுதந்தரம் என்று குறிக்கின்றார்." அவருடைய மிக முக்கியமான கவிதையான ‘விடுதலை, விடுதலை என்ற கவிதையில் பறையருக்கும் புலையருக்கும் தீயருக்கும் விடுதலை வேண்டுமென அறைகூவு கின்றார்." இங்கே கவனத்துக்குரிய ஒரு செய்தி: கேரளத்தில் தாழ்த்தப்பட்ட இனமான தீயரையும் இக்கவிதை எடுத்துப் பேசுவதால் பாரதி அண்டை மாநிலத்தின் சமூக அமைப்பைக்

  • Dr. M.G.S. Narayanan: Poetry and National Awakening P. 34 - Mahakavi Vallathol Birth Centenary Commemmoration Souvenir, Madras 1978.

14 பாரதியார் கவிதைகள் - ப. 181, வானவில் பிரசுரம், சென்னை - 1981. 35 பாரதியார் கவிதைகள் - ப. 181, வானவில் பிரசுரம், சென்னை - 1981. 104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/106&oldid=817071" இலிருந்து மீள்விக்கப்பட்டது