பக்கம்:பாரதியம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறித்தும் கவனித்திருந்தார் என்பது தெரியவருகிறது. கேரளத்தின் சாதி அமைப்பைக் குறித்தும் பூரீ நாராயண குருவின் பணிகளைக் குறித்தும் பாரதி அறிவதில் ஆர்வமுடையவராய் இருந்தார் என்பதை அவரது கட்டுரைகளால் அறியமுடிகிறது." வள்ளத்தோளும் காந்தி காட்டிய வழியில் ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்காகவும், தாழ்த்தப்பட்டவர் வளர்ச்சிக்காகவும் அக்கறையோடு கவிதைகள் பல எழுதியுள்ளார். ஐக்யமே சேவகள் செய்யும் என்ற கவிதையில் வள்ளத்தோள் கூறுகிறார்: "எத்துணை காலத்துக்கு முட்டாள்தனமாக, ‘என்னைத் தொடாதே', 'என் அருகில் வராதே’ என்று மனிதர்களைத் துரத்துகிறோமோ அத்துணை காலத்துக்கு இந்து தர்மத்தின் இனிய கீதத்தைக் கேட்க மாட்டோம்.' பரஸ்பரம் சகாயிப்பின்', 'பாபமோசனம்’, ‘சுத்தரில் சுத்தன்' 'என்ரெ ப்ரயாக ஸ்நானம்', 'ஜாதிப்ரபாவம் முதலிய கவிதைகளில் கடுமையாக சாதீயத்தை எதிர்த்துப் போரிடுகின்றார்." ஆயினும் எம். கே. சானு என்னும் திறனாய்வாளர் வள்ளத்தோளின் சாதி எதிர்ப்பும் சமூகச்சீர்திருத்தமும் அவரது முரண்பாடான கருத்துக்களில் தடுமாறுவதாகக் குறை காண்கின்றார். ‘நம்முடெ மறுபடி (1927) என்ற கவிதையில், நமது அரசியல் சுதந்தரத்துக்கான கடுமையான முயற்சிக்கு இடையே தீண்டாமையை ஒழிப்பது அத்துணை முக்கியமான கடமை அல்ல, என்று குறிப்பிடுவதாக அவர் எடுத்துக்காட்டுகின்றார்." ரீ நாராயண குருவைப்பற்றி அவர் கவிதைகள் அல்லது கட்டுரைகள் பேசுவதில்லை! 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற முழக்கத்தோடு உழைப்பாளிகளைப் புதிய சமுதாயத்தின் படைப்பாளிகளாகக் காண்கிறார்பாரதி. 'தொழில் என்ற கவிதையில் 16 சி.சுப்பிரமணிய பாரதி - கட்டுரைகள், ப. 337-364 பூம்புகார்பிரசுரம், சென்னை. " B.Hrdya Kumari: Vallathol. P. 24 Sahitya Akademi, New Delhi, 1974. 18 வள்ளத்தோளின் ரெபத்ய கிருதிகள் - ப. 315, 322, 345, 441, 406, NBS 1975. ”M.K. Sanoo- Poetry and National Awakening-P.41. M.V B.C.C. Souvenir, Madras, 1978. 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/107&oldid=817072" இலிருந்து மீள்விக்கப்பட்டது