பக்கம்:பாரதியம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பிரம்ம தேவன் கலை இங்கு நீரே என்று தொழிலாளிகளை, பெருமைப்படுத்துகின்றார்." இந்திய சமுதாயத்தை ஊடுருவி, பார்த்து, அச்சம் நிரம்பிய சமுதாயமாக அது அமைந்திருப்பதையும், அதிகாரமும், செல்வமும் மூடநம்பிக்கைகளும் அச்சமுதாயத்தை ஆட்டிப் படைப்பதையும், தங்கள் ஏழ்மைக்குத் தாங்களே காரணமறியாதவர்களாக மக்கள் இருப்பதையும் படம்பிடித்துத் காட்டுகிறார்." (பாதை ஜனங்களின் தற்கால நிலைமை) ஒரு சமூக விஞ்ஞானி போல் பாரதி சிந்திக்கின்றார். வள்ளத்தோளும் தொழிலாளர்களைப் பரிவுணர்வோடு அணுகு கின்றார். கர்ஷக ஜீவிதம்','கிருஷிக்காருடெ பாட்டு', 'என்ரெ பிரயாக ஸ்நானம் முதலிய கவிதைகளில் தொழிலாளி களுடன் தன் உள்ளத்துணர்வுகளைப் பின்னிக் கொள்கிறார் வள்ளத்தோள். “சாதாரண மக்களையும் அவர்கள் வாழ்வின் துயரங்களையும் சித்திரிப்பதோடன்றி சுரண்டல்காரர்களை நோக்கித் தவறாது விரல் சுட்டியும் காட்டுகிறது அவர் கவிதை. திரூர் பொன்னாணிப் чв. 'மாப்பு ஆகிய கவிதைகளில் எளியவர்களோடு வள்ளத்தோளுக்கு இருக்கும் அனுதாபம் தீவிரமாக வெளிப்படுத்தப்படுகிறது. பிற்காலத்தில் சுதந்தரத்துக்குப் பின்னும் வாழும் வாய்ப்பால் வள்ளத்தோள் இத்துறையில் அதிகமாகப் பணி செய்ய முடிந்திருக்கிறது. - பெண் விடுதலைக்காகவும் இவ்விரு கவிஞர்களின் பேனாக்களும் வேகமாக இயங்கியுள்ளன. தன்னைக் கட்டிய விலங்குகளையும் தளைகளையும் தகர்த்தெறியத் துடிக்கும் புதுமைப் பெண்ணை அறிமுகம் செய்கின்றார் பாரதி. பெண்கள் விடுதலைக் கும்மி சமுதாயம் அதிர முழங்குகிறது பாரதி கவிதையில். குழந்தை மணக் கொடுமையும், விதவைகள் துயரும் துடைக்கக் கட்டுரைகளிலும் எழுதினார்,பாரதி. பாங்சாலி, குயிலி, முதலிய பாத்திரங்களும் பெண்ணின் சுதந்தர உணர்வுக்கு அடையாளங்கள். பாரதிபோலத் தனிக் கவிதைகளில் பெண்களுக்காக வாதாடாமல் தான் படைத்த 20 பாரதியார் கவிதைகள் ப. 495, வானவில். 21 பாரதியார் கவிதைகள் ப. 155, வானவில். 106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/108&oldid=817073" இலிருந்து மீள்விக்கப்பட்டது