பக்கம்:பாரதியம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாத்திரங்களால் அதனை வெளிப்படுத்தினார் வள்ளத்தோள். இ.அச்சுதமேனன் குறிப்பிடுவதுபோல, வள்ளத்தோள் நேரடியாகத் தம் கவிதைகளில் இதற்காகப் பேசுவதில்லை. ஆனால் அவர் படைத்துள்ள பெண் பாத்திரங்கள் புதிய உணர்வும் கம்பீரமும், உள்ள உரமும், மேன்மையும் கொண்டு இலங்குகிறார்கள்." பந்தனஸ்த் தனாய அநிருத்தனி ல் வரும் உஷாவும் 'அச்சனும் மகளும் கவிதையில் வரும் சகுந்தலையும் இதற்கு ஒளிமிகுந்த எடுத்துக்காட்டுக்கள். தேசிய உணர்வைத் தட்டியெழுப்பப் பாரதி கையாண்ட மற்றொரு உத்தியும் உண்டு. சர்வதேச நிகழ்ச்சிகளை சமகாலப் போராட்டங் களுக்கு உத்வேகம் தரும் பொருட்டு எடுத்துக் கையாளுவது பாரதி இயல்பு. மாஜினியின் சபதம், உரைக்கப்பட்ட இடம் வேறானாலும் பாரதத்துக்கு அர்த்தமுடையதாகிறது. ஆக்கிரமிப்பாளனைச் செறுத்து நின்ற பெல்ஜியத்துக்கு வாழ்த்துக் கூறும் கவிதையும் மற்றொரு சான்று. சரித்திரப் புகழ்பெற்ற சோவியத் புரட்சிக்கு உற்சாகத்தோடு பாரதி கொடுத்த வரவேற்பு இன்னொரு மகத்தான எடுத்துக்காட்டு. இவ்வாறு உலகை உலுக்கிய நிகழ்ச்சிகளைத் தன் நாட்டு மக்களுக்கு வரலாற்று உணர்வோடு எடுத்துக்காட்டிப் பாடம் போதிக்கும் இயல்பு பாரதியினுடையது. வள்ளத்தோள் உலக சமாதான இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதும், பொதுவுடைமைச் சமுதாயமான ருசிய சமுதாயத்தைப் பாராட்டி யதும் மறுக்க முடியாதவை. ஆயினும் 1921க்கு முன்னால் சர்வ தேசியம் பாடியவன் பாரதி என்பதும். சுதந்தரம் கிடைத்த காலகட்டத்தில் தான் வள்ளத்தோளுக்கு இத் திசைமாற்றம் நேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய பாரதத்தைப் படைக்கும் அவசரமும் வேகமும் தடைகளை நொறுக்கி எறியும் ஆவேசமும் பாரதியினுடையது. இதனால் 'தனி ஒருவனுக்குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’

    • C. Achutha Menon: Foreword... P.9 Vallathol a Centenary Perspective. Mac

Millan, 1978. 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/109&oldid=817074" இலிருந்து மீள்விக்கப்பட்டது