பக்கம்:பாரதியம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கொதித்துக் குமுறி நிற்கிறது பாரதி கவிதை. அதே தேதி, லட்சியங்கள் கொண்டிருந்த வள்ளத்தோள் கவிதையோ "பரஸ்பரம் சகாயிப்பின் 'காதி வசனம் கைக் கொள்வின் என்று மன்றாடி நிதானமாக வேண்டுகோள் விடுகிறது. உக்கிரமும் அமைதியும் முறையே இவர்கள் கவிதைப் பண்பாகிறது. இரண்டு சிறந்த கவிஞர்களின் வரலாற்றையும் கவிதைகளையும் கவனமாகச் சீர் தூக்கிப் பார்க்கும்போது கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வருகிறோம்: 1. தன் வாழ்நிலைச் சூழ்நிலை காரணமாகத் தேசிய உணர்வைக் கவிதைப் பொருளாக்க வள்ளத்தோளுக்கு பாரதியை விட அதிக காலம் காத்திருக்க நேர்ந்தது. 2. பழமை இருவர் கவிதைகளிலும் பொருளாகிறதென்றாலும் வள்ளத்தோள் சமய ரீதியிலான கருவாக அவைகளைக் கையாண்டார். ஆனால் பாரதி சமயவாதியாயிருந்தும் அக் கருவை சமகாலப் பிரக்ஞையோடு உருவகிக்க முற்பட்டார். 3. பாரதிக்கு அரசியல் சுதந்திரம் போல சமூக, பொருளாதார விடுதலையும் முக்கியமானவை. வள்ளத்தோளுக்கு அரசியல் சுதந்தரம் அனைத்துச் சுதந்தரங்களுக்கும் மூலம் என்ற கருத்தோட்டம் இருந்தது. 4. இந்திய சுதந்தரத்தை சர்வதேசப் பின்னணியில் வைத்துப் பார்த்தார். பாரதியைப் போல சர்வதேசிய நோக்குக் கொள்ள வள்ளத்தோளுக்கு மிகப் பிற்காலத்தில் தான் சாத்தியமாயிற்று. 5. பாரதி கொந்தளிக்கும் கடல் போல் கவிதைகளைக் கொடுத்தவன். தேசிய உணர்வையும் ஆழ்ந்த நதி போல் நிதானமாகத் தந்தவர் வள்ளத்தோள். 108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/110&oldid=817076" இலிருந்து மீள்விக்கப்பட்டது