பக்கம்:பாரதியம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணியப் பாரதியார்: ஓர் அரசியல் வாதியின் உருவாக்கம் கோ. கேசவன் பாரதியின் படைப்புகளையும் வாழ்க்கையையும் காணும்போது, அவர் பல்வேறு கோணங்களில் பலருக்குக் காட்சியளிக்கிறார். அவற்றுள் ஒன்றுதான் பாரதி எனும் அரசியல்வாதி. அதிலும்கூட, பாரதி தீவிர வாதியாகவும் (Extremist) மிதவாதியாகவும் (Moderate) இருந்தார் என்றும் கூறுவர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இணக்கமற்ற கண்ணோட்டம் கொண்டிருந்தார் எனச் சிலரும், அவ்வாறு இல்லை எனச்சிலரும் கூறுவர். ஆயின் இவை எல்லாவற்றுக்கும் ஓர் உள்முகம் உண்மையான முகம் என ஒன்றுரண்டு. ஒரு மரத்திற்குப் பல கிளைகளும் விழுதுகளும் எங்கெங்கோ படர்ந்திருப்பினும், அதன் வேர்களே அவற்றின் தன்மையை நிர்ணயிப்பதைப் போல, இந்த உள்முகமே பாரதியை நிர்ணயித்திருக்கும். இந்த உள்முகத்தைக் காணவேண்டுமாயின் பாரதி எப்படி அரசியல்வாதி ஆக மாறினார் என்பதைக் காணுதல் அவசியமாகும். அப்போதுதான் வேறு துறைகளிலும் கூட அவரது முரண்பட்ட தோற்றங்களை நாம் ஒருவாறு ஊகிக்க இயலும், இதுவே நம் கட்டுரையின் நோக்கமாகும். நம் கட்டுரையின் நோக்கத்திற்கு நுழையுமுன், அரசியல் என்றால் என்ன என்பது பற்றியும், பொதுவில் ஒர் அரசியல்வாதி எப்படி 109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/111&oldid=817077" இலிருந்து மீள்விக்கப்பட்டது