பக்கம்:பாரதியம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவாகின்றான் என்பது பற்றியும் காணுதல் பொருத்தமாயிருக்கும். முதலில் அரசியலைப் பார்ப்போம். சமூகம் நாகரிகமடைந்த காலம் முதற்கொண்டே பல்வேறு பெருங்குழுக்களாகச் சமூகம் பிளவுண்டதைக் காண்கிறோம். உற்பத்தி முறையில் ஈடுபடுவதைக்கொண்டு உற்பத்திப்பொருள் இட்டில் பெறும் இடத்தைக் கொண்டும் இத்தகைய குழுக்களுக்கான சமூக இடம் நிர்ணயிக்கப்படும். ஒவ்வொரு சமூக குழுக்களிலும் உள்ளதனிமனிதர்களுக்கு இடையில் uమGఖD கருத்து வேறுபாடுகளும் சுயநல ஆதிக்கப்போட்டிகளும் ஏற்படும் என்பதும் இயற்கையே. ஆயினும் பரந்துபட்ட பரிமாணத்தில் காணும்போது சமூகக் குழுக்களின் ஒட்டு மொத்த நலனுக்குள்ளே இத்தகைய கருத்து வேறுபாடுகளும் போட்டிகளும் கலந்துவிடுகின்றன. இத்தகைய சமூகக் குழுக்கள் தத்தம் நலனில் அக்கறை கொண்டிருக்கும். அதற்கான கருத்துக்களைப் பல்வேறு துறைகளில் உயிர்ப்போடு உலவ விட வேண்டிய சமூக அவசியத்திலும் உள்ளது இவற்றில், அரசு, அதிகாரம் தொடர்பான கருத்துக்களும் செயல் ஈடுபாடும் அரசியல் எனப்படும். எனவே அரசியல் என்பது பல்வேறு வகைப்பட்டசமூகக் குழுக்களின் நலனுக்கான திட்டவட்டமான கருத்துகள், செயற்பாடுகள் ஆகியவற்றின் செறிவாகும் எனலாம். இவற்றின் நடைமுறையில் பல்வேறு விதமான சமூகக் குழுக்களின் கலைப்புகளும் சேர்க்கைகளும் ஏற்படும். எனவே அரசியல் என்பது ஏதாவது ஒரு பெருங்குழுவைச் சார்ந்ததாகவே இருக்கும். நாகரிகம் அடைந்த சமூகத்தில் அனைத்து மக்களுக்கான அரசியல் என்பது இருக்கவியலாது எனக் கூறுவதற்கு இதுவே காரணம் என்பர். இத்தகைய அரசியற் கருத்துக்களும் செயற்பாடுகளும் எல்லாக் கால கட்டங்களிலும் ஒரே மாதிரி இருந்ததில்லை. காலத்திற்கு காலம் மாறுபட்டுக் கொண்டே வருகின்றது. மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம் என்ற நிலையில் ஒரு தனிமனிதனை உயர்த்திப் பிடித்தலை கேள்விகேட்பாரற்ற, முடி அரசுத் தன்மையைக் கண்டோம்; எல்லாத் தனிமனிதனுக்கும் திறமைக்கேற்ற உழைப்பு உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற நிலையில் உண்மையான சமத்துவத்தை நோக்கிச் செல்லும் சமத்துவக் குடியரசையும் காண்கிறோம். எனவே காலத்துக்குக் காலம் அரசியல் நிறுவன வடிவங்கள் மாறுபடுகின்றன. இதையொட்டி புதிதாக இயக்கங்களும் மலர் 110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/112&oldid=817078" இலிருந்து மீள்விக்கப்பட்டது