பக்கம்:பாரதியம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றன. எனினும் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் பொருளியல் நலன்கள் எப்போதும் அதன் அரசியலோடு தொடர்பு கொண்டிருக்கும். இதனையே அரசியல் என்பது பொருளாதாரத்தின் Gaff; out, alth (Politics is the concentrated form of economics) GT3ð7Ls fTT. இத்தகைய அரசியல் கருத்துக்களைக் கூறுவதற்கும் அரசியல் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் நேரடியாக அந்தந்த சமூகக் குழுக்களே எப்போதும் ஈடுபடும் எனச் சொல்வதற்கு இல்லை. பெரும்பாலும் அறிவுத்துறையான (Intellectual sphere) அரசியலில், அறிவாளிகளே ஈடுபடுவர். இவர்கள் சில சமூகக் குழுக்களின் நலன்களை வரலாற்று ரீதியில் தம்மளவில் சுவீகரித்துக்கொண்டு சிந்தனைத் தளத்தில் இயங்குவர். இத்தகைய தன்மைகளைக் கொண்ட அரசியல் சமூகத்தின் மொத்தத்தன்மையை மட்டும் பாதிப்பதில்லை; சமூகத்தின் சிதறுண்ட இறுதிப் பிரிவானதனிமனிதனையும் பாதிக்கிறது. பொதுவாகவே ஓர் அரசியல்வாதியின் உருவகத்திற்கு அவனது வாழ்க்கை, சிந்தனை முறை, சூழல் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன, இன்னும் கருங்கினால் அவனது வர்க்க நிலைபாடும் புறவுலக நிலையும் எனலாம். அதாவது புறவுலகை அவன் எப்படி எதிர்கொள்கின்றான் என்பதும் புறவுலகு அவனை எப்படி எதிர்கொள்கின்றது என்பதும் முக்கியமாகும், அதாவது இன்னும் எளிமைபடுத்தினால் தனி மனிதனின் அகநிலை மனோபாவம் எவ்வாறு புறநிலை யதார்த்தத் துடன் இணைகின்றது என்பதே இங்கு நாம் காணவேண்டியதாகும். இந்த இரண்டும் நிலைத்தவை அல்ல. இவற்றுக்கு மாறுதல் (வளர்ச்சியும் தேய்வும்) உண்டு. இத்தகைய மாறுதலுக்கு உட்பட்டே இவற்றைக் காணவேண்டும். எனவே எட்டயபுரத்துச் சுப்பையா, பூரீமான் சி. சுப்பிரமணிய பாரதி அரசியல்வாதியாக எப்படி உருவெடுத்தார் என்பதைக் காண அவரது அகநிலை மனோபாவத்தை யும் அக்காலத்திய புறநிலை உலகையும் காணல் அவசியமாகும். முதலில் புறநிலை யதார்த்தத்தைச் சுருக்கமாகக் காண்போம். பாரதி 1882 டிசம்பர் 11இல் பிறந்தார். அவர் அரசியலுக்கு 1906க்குள் வந்து விடுகிறார். எனவே இதற்கு இடைப்பட்ட காலம் நமக்கு முக்கியமானதாகும். அதிலும் 1904 முதல் 1906 வரையிலான காலம் 111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/113&oldid=817079" இலிருந்து மீள்விக்கப்பட்டது