பக்கம்:பாரதியம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகமுக்கியமானதாகும். ஏனெனில் இதுதான் அவர். அரசியலுக்கு: நுழைந்த காலம் ஆகும். கி.பி. 17ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே இந்நிலப்பகுதிகளில் உள்ள நிலவுடைமைத்துவ நிலவுடைமை அரசுகள் சிதறுண்டு போயின. நிலவுடமை அரசுகளுக்கு இடையிலும் நிலவுடமை அரசுக்கும் மக்களுக்கும் இடையிலும் முரண்பாடுகள் முற்றி, ஆயுதக் கலகங்களாகவும் போர்களாகவும் அவை வெளிப்பட்டன. அதேநேரத்தில் 17ஆம் நூற்றாண்டு தொடங்கி வெளிநாட்டு வணிகக் கம்பெனிகள் இந்தியக் கடற்கரையோரப் பகுதிகளை முற்றுகையிட்டன. இவைகளுக்கு இடையிலான முரண்பாட்டின் இறுதியில் பிரிட்டனே வென்றது. 1757 பிளாசிப்போர், 1765 பாக்சர்போர் ஆகியவற்றிற்குப்பின் வங்காளம், பீகார் ஒரிசா ஆகிய பகுதிகளின் அரசியல் அதிகாரம் பிரிட்டன் வணிகக் கம்பெனிக்குக் கிடைத்தது. இதன்பின் இந்தியா, பிரிட்டன் முதலாளியத்துக்கு ஏற்ற விதத்தில் செதுக்கப்பட்டது. இங்குள்ளகைவினைஞர்களைச்சுரண்ட தரகு வணிக முதலாளிகள் பிரிட்டனுக்குப் பாலமாக அமைந்தனர். ஏற்றுமதியையே மையமாகக் கொண்டிருந்ததால், விளைபொருள் நிலங்களின் பரப்பை அதிகரிக்க, ஆக்ரமிப்புக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் விளைவாக மன்னர்கள் பிரிட்டன் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர். விளைபொருள்களின் ஏற்றுமதியை மையப்படுத்தியதால் உழவர்கள் மிகுந்த சுமையை ஏற்றனர். இதனால் உழவர்களுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் இடையில் முரண்பாடு முற்றியது. இது உழவர் ஆயுதக் கலகங் களுக்குக் காரணமாயிற்று. இத்தகைய பல முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே 1857இல் பிரிட்டன் வணிக நிறுவனக்கொள்ளை ஆட்சிக்கு எதிராக உழவர்கள், இராணுவ வீரர்கள், மன்னர்கள் ஆகியோர் ஆயுதக் கழகங்களில் ஈடுபட்டனர். ஏறத்தாழ ஒராண்டுக்கும் அதிகமாகவே பிரிட்டனின் துப்பாக்கிகளுக்கு ஈடுகொடுத்த இவர்கள், இறுதியில் தோல்வியடைந்தனர். புரட்சி குறித்த தொலைநோக்குப் பார்வை இன்மை, அமைப்புரீதியாகச் செயல்படாமை, ஊசலாடும் ம்னப்பான்மை போன்ற முக்கியமான அம்சங்கள் தலைமைக்கு இருந்ததனால் இது தோல்வியடைந்தது. இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என காரல் மார்க்ஸால் கூறப்பட்ட இது, கீழ்க்கண்ட படிப்பினைகளை வழங்கிற்று எனலாம். 112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/114&oldid=817080" இலிருந்து மீள்விக்கப்பட்டது