பக்கம்:பாரதியம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டத்திற்குத் தலைமையேற்கும் சக்தி, புரட்சிகர சத்தியாக இல்லையெனில், போராட்டத்தைப் பேரம் பேசும் ஆற்றலுக்காகவும் இறுதியில் சமனற்ற சமரசத்திற்கும் தலைமை இட்டுச் செல்லும். 2. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின்போது தரகு முதலாளி களும் நிலப்பிரபுக்களும் தங்கள் எஜமானர்களான ஏகாதிபத்தியத்தின் பக்கமே இருப்பர். இத்தகைய அம்சங்கள் நீண்ட நெடுங்காலத்துக்கு இந்திய அரசியலில் நீடித்தன. 1857க்குப்பின் இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். வேளாண்மை நாடான இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பஞ்சங்கள் நிகழ்ந்தன. 1861, 1865, 1866, 1868,1869,1874, 1876, 1878 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் குறிப்பிடத்தக்கன. இவற்றின் விளைவாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு - நிலவுடமைத்துவ எதிர்ப்பு ஆகியவற்றின் விளைவாகவும் மாபெரும் உழவர் கழகங்கள் ஏற்பட்டன (இவற்றிற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் ஆதரவுதர தலைப்பட்டனர். இத்தகைய காலத்தில் பிரிட்டனிலிருந்து இங்கு வந்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட அறிஞர்கள், 1857ஆம் ஆண்டில் நடந்ததைப்போன்று ஒரு புரட்சி ஏற்பட்டால் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்றும் அதை அடக்கவே இயலாதென்றும் குறிப்பிட்டனர். 1857இன் போது பஞ்சாபில் ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்து 'நல்ல பெயரெடுத்த” ஏ.ஓ.ஹியூம், வெட்டர்பர்ன் போன்றோர் தம் பணியினின்று விலகிய பின், இது குறித்து ஆராய்ந்தனர். இந்தியா வெடிக்கும் நிலையில் உள்ளதென உணர்ந்து, இதற்கு சட்டரீதியிலான வடிகால்களைக் காண முயன்றனர். இது குறித்து அந்நேரத்திய தரகு முதலாளிய நிலப்பிரபுத்துவ மேல்தட்டு அறிவாளிகளின் இயக்கங்களை அணுகினர். இவர்களுக்கும் இந்தியா அளவிலானதும், பிரிட்டன் ஏகாதிபத்துடன் தேவைப்படும்பொழுது பேரம் பேசுவதற்குமான ஓர் அரசியல் அமைப்பு தேவைப்பட்டது. இந்த இரண்டு தரப்பாரின் தேவைகளை ஒட்டியே 1895இல் பம்பாயில் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியது. ஏ.ஓ.ஹியூம் சொன்னதைப்போல இது ஒரு பாதுகாப்புக் 113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/115&oldid=817081" இலிருந்து மீள்விக்கப்பட்டது