பக்கம்:பாரதியம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேடயமாகும். அதாவது 1857க்குப்பின் ஏற்பட்ட மாற்றங்களை மீண்டும் ஒர் ஆயுதக் கலகத்தில் கொண்டுபோய் முடியாவண்ணம் பாதுகாப்புக் கேடயமாக இயங்கினர். அது முதற்கொண்டு சட்ட ரீதியான செயல்கள் பிறப்பெடுத்தன. மனுப்போடுதல், தீர்மானம் இயற்றல், அதிகாரிகளுக்கும் மந்திரிக்கும் அனுப்பல், பிரிட்டனில் உள்ள காமென்ஸ் சபையின் உறுப்பினர்க்கு அறிக்கைகள் மூலமும் நேரிலும் விளக்கல், இன்னோரன்ன செயல்முறைகளையே கைக்கொண்டனர். இதற்கு மிதவாதம் என்றும் இத்தகைய போக்கினர் மிதவாதிகள் (Moderates) என்றும் பெயர் பெறுவதுண்டு. இந்த மிதவாத அரசியலை நடுத்தர வர்க்கத்தின் மேல்தட்டுப் பிரிவின் அறிவாளிகளே தூக்கிப்பிடித்தனர் இவர்களுக்குப்பின்னே தம் பொருளியல் நலனைக் கட்டிக்காக்க நினைக்கும் தரகு முதலாளியச் சமூகக்குழு இருந்தது. நிரந்தர நிலவரித் திட்டத்தையும் (Permanent Settlement) sugglassifi (sponso Go Lujib (Ryotwari Settlement) கட்டிக்காக்க நினைக்கும் நிலவுடமையாளர்கள் இருந்தனர். ஏகாதிபத்தியத்தின் மக்கள் விரோதச் சட்டங்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்துவம் பங்காளிகளாக விரும்பிய நடுத்தர வர்க்கத்தின் மேல்நாட்டுப் பிரிவினரும் இருந்தனர். ஆயினும் நாட்டின்நிலைமை மேன்மேலும் மோசமாகிக்கொண்டு வந்தது. 1880 முதல் 1905 வரையிலான காலத்தில், உணவுப் பொருள்களின் விலைவாசி 46 சதவீதம் உயர்ந்தது; அதே நேரத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகள், அடிநிலை விவசாயிகள், விவசாய மல்லாத துறையில் உள்ளோர் ஆகியோர் வருமானம் 11 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. 1900இல்2 கோடி 80 லட்சம் மக்களும் 1905இல் 3 கோடி 30 லட்சம் மக்களும் 1907இல் 4 கோடி லட்சம் மக்களும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டனர். தொடக்க காலத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் ஏகாதிபத்தியத்துக்கும் அடிநிலை மக்களுக்கும் இடையிலான முரண்பாடு, பகை முரண்பாடாகவும் பிரதான முரண்பாடாகவும் நிலவிவந்தது எனலாம். இது மட்டுமன்றி, மேனாட்டுக்கல்வி பயின்ற நடுத்தரவர்க்க இளைய அறிவாளிகள் உலக வரலாற்றைத் தெரிந்து கொண்டதனால், அடிமை நாடுகளின் புரட்சிகர வரலாற்றைத் தெரிந்து கொண்டதனால், இவர்கள் சொந்த நாட்டின் அடிமை நிலையைக் கண்டு மனம் வெதும்பினர். நடுத்தரவர்க்க ஜனநாயகவாதிகளாக உருவெடுத்த 114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/116&oldid=817082" இலிருந்து மீள்விக்கப்பட்டது