பக்கம்:பாரதியம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்கள் இத்தகைய கண்ணோட்டத்தில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முணுமுணுக்கத் தொடங்கினர். இவர்கள் அறிவு நிலையில் மட்டுமன்றி, வாழ்நிலை ரீதியிலும் ஏகாதிபத்தியத்தோடு முரண் கெர்ண்டனர். ஏகாதிபத்தியம் ஒருபுறம் மேனாட்டுக் கல்வியைப் பெருக்கியது; இன்னொருபுறம், அவர்களுக்கான பதவிகளை அந்த வேகத்தில் உருவாக்க வில்லை. எனவே செல்வாக்கு இல்லாத நடுத்தரவர்க்கத்தின் கீழ்த்தட்டு அறிவாளிகள், உரிய பதவிப் பொறுப்பின்றி இருந்தனர்.இவர்கள் ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்துவ அமைப்பில் சிறு சிறு பதவிகள் வேண்டி நின்றனர். இவ்வாறு ஏகாதிபத்தியத்துக்கும் நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டுப் பிரிவினர்க்கும் இடையில் முரண்பாடு தீவிரமாக வலுத்தது. அதே நேரத்தில் தேசத்தில் சில மாறுதல்கள் தொடங்கி, உறுதியாயின. தொடக்ககாலத் தொழில் முதலாளிகட்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் நட்பு முரண்பாடு உருவெடுத்தது எனலாம். இந்தியாவின் ஆலைத்தொழில் 1851-இல் தொடங்கியது. அன்றைய முக்கிய மாகாணங்களான பம்பாய், வங்காளம், சென்னை ஆகியவற்றில் பம்பாயில் இந்திய முதலாளிகளே ஆலைத் தொழிலைத் தொடங்கினர். இதற்குச் சில வரலாற்றுக் காரணங்கள் உண்டு. பிரிட்டன் வணிக நிறுவனங்களுடன் தரகு வணிகத்தில் ஈடுபட்டவர் களே இவற்றைத் தொடங்கினர். இவர்கள் தம் மூலதனத்திற்கு ஏகாதிபத்தியத்துடனான வணிகத்தை நம்பியிருந்தனர். ஆலைத் தொழிலில் இறங்கியபின்னும், தரகு வாணிபத்திலும் இருந்தனர். இத்தகைய ஆலைகள், ஏகாதிபத்தியத்துக்குப் போட்டியாக இல்லை. பெரும்பாலும் நூல், துணி உற்பத்தியில் உள்ள இத்தகைய ஆலைகள் கடினத்தன்மை கொண்ட துணிகளையே உற்பத்தி செய்தது; மான்செஸ்டர் மென்மைத் துணியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது; பம்பாய்த் துணிகளும் நூல்களும் உள்நாட்டுச் சந்தையைப் பெரிதும் மான்செஸ்டருக்குக் கொடுத்துவிட்டு வெளிநாட்டுச் சந்தையை மையப்படுத்தியது. இவர்கள் உற்பத்தி செய்த பத்தாண்டுகளில் இறக்குமதி பெருகிற்று. 1880இல் பிரிட்டனிலிருந்து இறக்குமதியான துணியின் அளவு 1890இல் நான்கு மடங்காக உயர்ந்தது. 1900-ஆம் ஆண்டளவில் பிரிட்டன் ஆலைகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த துணியின் மதிப்பைவிட, இங்கிருந்து வெளி நாட்டுக்கு ஏற்றுமதியான துணியின் மதிப்பு அதிகம். அதாவது 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/117&oldid=817083" இலிருந்து மீள்விக்கப்பட்டது