பக்கம்:பாரதியம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்நாட்டுச் சந்தையை வெளிநாட்டுப் பொருள்களுக்குக் கொடுத்துவிட்டு வெளிநாட்டுச் சந்தையைத் தான் பெற்று மான்செஸ்டர் ஆலைகளுடன் சமாதான சகவாழ்வு கொண்டிருந்தது. மேலும் பிரிட்டன், இத்தகைய ஆலைகளுக்கு மூலப் பொருள்களைக் கொண்டு வரத்தக்க இரயில் பாதைகளை அமைத்துக் கொடுத்தது; சரக்கு இரயில் கட்டணம் மிகக் குறைந்த அளவில் விதிக்கப்பட்டது. இத்தகைய ஆலைகளுக்கான இயந்திரப் பொருள்களும் தொழில் நுணுக்கமும் ஏகாதிபத்தியத்தால் செய்து கொடுக்கப்பட்டன. இயந்திரப் பொருள்களின் விலையை சுலபத்தவணைகளில் பெற்றது. இது மட்டுமன்றி, பிரிட்டன் இயந்திரத்தொழிற்சாலைகள் பம்பாய் ஆலைத்தொழிலுக்கான மூலதனத்தில் மிகச்சிறிய பகுதியைச் சில நேரங்களில் திரட்டிக் கொடுத்ததாகவும் அறிகிறோம். இவை யெல்லாவற்றையும் ஒருங்குசேரப் பார்க்கும்போது, பம்பாயில் தொடங்கப்பட்ட ஆலைகள் ஏகாதிபத்தியத்தின் வாழ்விலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ளன; அவற்றுக்குக் கட்டுண்டன எனலாம். இங்கிலாந்திலிருந்து வெவ்வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய பொருள்களைத் தம் காலனிய நாட்டில் தம் இயந்திரப் பொருள்களையும் தொழில் நுணுக்கத்தையும் கொண்டு, தம்மிடம் தரகு உறவு வணிகத்தால் கிடைத்த மூலதனத்தையும் கொண்டு உற்பத்தி செய்ய வைத்தனர். இவற்றை இறக்குமதிப் பதிலிகள் (import Substitute) என்பர். இவற்றில் தேசியத் தன்மை இல்லாததால், இத்தகைய இந்தியத் தொழில் முனைவர்களைக் காரல் மார்க்ஸ் தேச முதலாளிகள் (Native Bourgeoisie) என்பர். இவர்கள் தன்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு அற்றவர்களாக உள்ளனர். வணிக முதலாளியக் கால கட்டத்தில் இந்தியாவில் தரகு வணிக முதலாளிகள் பிறப்பெடுத்ததைப் போலவே, தொழில் முதலாளியக் காலகட்டத்தில் (1813 - 1900) இத்தகைய தேச முதலாளிகள் உருவெடுத்தனர். ஏகாதிபத்தியத்தின் நிதி மூலதனக் காலகட்டத்தில், இவர்களின் செழுமைப்பட்ட வடிவமாக கூட்டு இசைவாளர்களைக் (Colloborators) GT6TeofTib. இத்தகைய தொழில்துறை முதலாளிகட்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையே எவ்விதப் பகை முரண்பாடும் கிடையாது. ஆயின் தரகு வணிக முதலாளிகளை விட இவர்கள் உற்பத்தி முறையில் சிறிது முன்னேறியவர்களாதலால், தரகு முதலாளிகளுக்கும் பிரிட்டனுக்கும் இருந்த உறவைப் போலன்றி இவர்கள் உறவு சிறிது வேறுபட்டுக் காணப்படும். அது சில அசைவுகளையும் மாற்றங்களையும் பொறுத்துக் காணப்படும். 116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/118&oldid=817084" இலிருந்து மீள்விக்கப்பட்டது