பக்கம்:பாரதியம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹரோப்பிய நாடுகளில் பிரிட்டனைப் போன்று ஆசிய நாடுகளில் ஜப்பான் சுயமுதலாளிய அமைப்பாக உருவெடுத்து, அண்டை நாடுகளின் சந்தையைப் பிடிக்கத் தொடங்கியது. 1905ஆம் ஆண்டளவில் ஜப்பான், சீனச் சந்தையைப் பிடித்துக் கொண்டது. தூரகிழக்கு நாடுகளில் இந்திய தேச முதலாளிகளின் சந்தையை ஜப்பான் ஆக்கிரமித்துக்கொண்டது. இப்போது தேச முதலாளிகட்குச் சந்தையில்லை. அன்னிய நாட்டுச்சுயமுதலாளியத்தின் நுணுக்கமான உற்பத்திப் பொருள்களோடு போட்டியிடும் அளவிற்குத் தொழில் நுணுக்கம் இல்லை; சொந்த நாட்டுச் சந்தையைப் பயன்படுத்தும் அரசியல் அதிகாரமும் இல்லை. எனவே இங்கே ஏகாதி பத்தியத்துக்கும் தேசமுதலாளிகட்கும் முரண்பாடு உருவாகிறது. ஆயின் இது ஒருவரை ஒருவர் அழித்து விடக்கூடிய பகை முரண்பாடு இல்லை. எனவே 1900இன் முதல் பத்தாண்டுகளில் இங்கே சமூக நிலைகளும் அவற்றையொட்டிய முரண்பாடுகளும் சற்றே வேறுபட்டுக் காணப்பட்டன. இந்தியாவின் அடிநிலை மக்களுக்கும் ஏகாதிபத் தியத்துக்கும் இடையிலான பகை முரண்பாடு; படித்த கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க அறிவாளிகளின் அறிவு ரீதியான பகை முரண்பாடு; வேலை வேண்டிய வாழ்வியல் ரீதியான நட்பு முரண்பாடு; தரகுத்தன்மை கொண்ட தேசமுதலாளிகளின் சந்தை வேண்டி அலைந்த நட்பு முரண்பாடு - இவற்றுள் மூன்றாம் பிரிவினரும் நான்காம் பிரிவினரும் இணைந்து ஓரணியில் நின்றனர். இவர்களுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான முரண்பாட்டின் தன்மை நட்புத் தன்மையாக இருந்ததே இதன் காரணம் எனலாம். இவர்கள் தலைமையேற்ற பிரிவிற்கு தீவிரவாதம் (Extremism) Ggåucungub (Nationalism) @gmgyou; Gsähuangth (Militant Nationalism) என்று பலபடக் கூறுவர். இவர்கள் முதல் வகையிலான முரண்பாட்டை அவ்வப்போது தங்களுக்குச் சாதகமான அளவிற்குப் பயன்படுத்திக் கொண்டனர். ஏகாதிபத்தியத்துடன் அறிவுரீதியான பகை முரண்பாட்டைக் கொண்ட நடுத்தரவர்க்கக் கீழ்த்தட்டு இளைஞர்கள், இந்தப் பகை முரண்பாட்டைத் தீர்ப்பதற்குரிய அரசியல் தத்துவம் இன்றியும் போராட்ட வடிவம் இன்றியும் வெறும் தன் அறிவுரீதியிலான ஆயுதச் செயல்களிலே ஈடுபட்டனர். இவர்களைப் பயங்கரவாதிகள்(Terrorists) என்று வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/119&oldid=817085" இலிருந்து மீள்விக்கப்பட்டது