பக்கம்:பாரதியம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1909இல் ஜன்மபூமி (ஸ்வதேச கீதங்கள் - இரண்டாம் பாகம்) என்ற பாடல் தொகுதி நூலை வெளியீடு செய்தார் பாரதி. இதனைத் தொடர்ந்து மேலும் பல நூல்களை நண்பர்களின் ஒத்துழைப்புடன் வெளியிடவே செய்தார். இயற்கையின் அழகுகள், தேசத்தின் செய்திகள், மக்களின் மனநடைகள் ஆகியனபற்றிப்பாச்சுவையும் பல்சுவையும், பரவிய கந்தர்வ நடையில் ஞானரதம் என்றொரு கதைநூலை 19i0ஜனவரியில் பாரதி வெளியீடு செய்தார். இதன் கதைப் போக்கிலும், நடையழ கிலும் சொக்கிப்போன பாவேந்தர் பாரதிதாசன் “ஞானரதம் போல் ஒரு நூல் எழுதுவதற்கு நானிலத்தில் ஆளில்லை” என்று வருணிக்கிறார். ‘ஞானரத கதை நூலையடுத்து, 1910 நவம்பரில் கதாநாயகன், தன் சரிதையைத் தானே சொல்லும் முறையில் அமைந்த கனவு என்ற ஸ்வரிதை கவிதைநூலும், சமூகச்சீர்திருத்தத்தை வலியுறுத்தும் ஆறில் ஒரு பங்கு என்ற சிறுகதை நூலும் வெளியாயின. புதுச்சேரியினின்றும் பிரசுரமானநூல்கள் என்ற போதிலும் மேற்கண்ட நூல்களில் ராஜத்துவேஷமான கருத்துக்கள் இருப்பதாக ஊகித்து, அந்நூல்களைப் பிரிட்டிஷ் அரசு தடை செய்துவிட்டது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் குறித்துப் பாரதியார் அரசாங்கத்துடன் கடிதத் தொடர்பு கொண்டார். பத்திரிகைகளில் அரசின் போக்கைக் கண்டித்து எழுதினார். தமது நூல்கள் தடை செய்யப் பெற்றுங்கூட, பாரதியார் மனம் தளராமல், நமது (தமது அல்ல) எழுத்துச் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற உரிமை உணர்வால் உந்தப்பட்டு, நூல் பிரசுர முயற்சியைக் கைவிடாமல் மேற்கொண்டார். புதிய காவியம் படைக்கத் திறன் இருந்தும், தாம் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலைகளை மனதில் கொண்டு, வியாசரையும் ஓரளவு வில்லியையும் தழுவி, ஒரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் பொருள் விளங்கும்படி எழுதிய பாஞ்ாசாலி சபத முதற்பாக நூலை 1912லே வெளியிடத்தான் செய்தார். 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/12&oldid=817086" இலிருந்து மீள்விக்கப்பட்டது