பக்கம்:பாரதியம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1900இன் தொடக்கம் முதற்கொண்டே இத்தகைய குரல்கள் இந்திய தேசியக் காங்கிரசில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. இவற்றுள் தீவிரவாதிகள் தங்கள் கொள்ளைக்கு ஏற்ப நட்பு முரண்பாடே கொண்டிருந்ததனால், ஏகாதிபத்தியத்திடமிருந்து முழுமுற்றான விடுதலையைக் கோரவில்லை. ஏகாதிபத்திய ஆளுகைக்குட்பட்ட சுயராஜ்யம் கேட்டனர். ஏகாதிபத்தியத்தின் சட்ட வரம்புக்குட்பட்ட போராட்ட வடிவங்களையே மேற்கொண்டனர். சந்தையை வேண்டி நின்ற அவர்களுக்கு, சுதேசியம், அன்னியப் பொருள் மறுப்பு என்பவை பொருளாதாரமுழக்கங்களாயின. ஸ்வராஜ்யம், அவர்களது அரசியல் முழக்கமாகவும் தேசியக் கல்வி, கலாச்சார முழக்கமாகவும் ஆயிற்று. மேலோட்டமாகப் பார்க்கும்போது முழுமைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணாம்சங்கள் கொண்டுள்ளவையாக இவை தோன்றக்கூடும். ஆயின் இவர்களது ஸ்வராஜ்யம் ஏகாதிபத்திய ஆளுகைக்கு உட்பட்டதே; சுதேசியமும் அன்னியப் பொருள் மறுப்பும் வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்களுக்கு குறிப்பாகத் துணிகளுக்கும் நூல்களுக்கும் - மட்டுமே; உள்நாட்டுப் பிரிட்டன் ஆலைப் பொருள்களுக்கல்ல; ஆயினும் இவற்றை அரசியல் படுத்த நடுத்தர வர்க்க ஜனநாயக வாதிகள் முயன்றனர். இதற்கான வாய்ப்பு வங்காளத்துக்கு கிடைத்தது. காலனிய ஏகாதிபத்தியம், தன் நிர்வாக வசதி கருதியும் இந்து முசுலீம் ஒற்றுமையைக் குலைக்கக் கருதியும் வங்கப்பிரிவினையை 1905இல் கொணர்ந்தது. இதை எதிர்த்து வங்காளத்தின் ஆற்றல்மிகு நடுத்தரவர்க்கம் மக்களின் வட்டார உணர்வைத் (Regionalism) தட்டி எழுப்பியது. அதன் இயல்புப் போக்கிலேயே சுதேசியம் அன்னியப் பொருள் மறுப்பு என்பன அதன் முழக்கங்களாயின. நீண்ட நெடுகாலமாகவே ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆளுகைக்குட் பட்டிருந்த வங்காளத்தில், சிறுவணிகர், அரசு அலுவலர் ஆகியோர் குடும்பங்களே கல்வி பெற்று வந்தன. இத்தகைய வர்க்கங்களின் கோரிக்கைகளாக சுதேசியம், அன்னியப் பொருள் மறுப்பு என்பன தோன்றின. எனவே இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள பம்பாயில் தேச முதலாளிகட்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான சந்தை குறித்த நட்பு முரண்பாடு; வடகிழக்குப் பகுதியில் உள்ள வங்காளத்தில் நடுத்தரவர்க்கத்தினரின் பகுதி உணர்வின் அடிப்படையிலானதும் 118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/120&oldid=817087" இலிருந்து மீள்விக்கப்பட்டது