பக்கம்:பாரதியம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே தொடக்க கால அரசியலில் பிராமணர்களே மிகுந்திருந்தனர் எனத் தெரிகிறது. இந்த மேலாதிக்கம் 1920 வரை நீடித்தது எனலாம். 1919ஆம் ஆண்டில் சென்னை மாகாணக் காங்கிரஸ் கமிட்டியில் இருந்த 29 உறுப்பினர்களில் 15 பேர் பிராமணர்கள் ஆவர். அதே நேரத்தில், பல்வேறு தொழிலில் இருந்த நடுத்தர வர்க்கத்தினரே அரசியலுக்கு வந்தனர். வக்கீல், ஆசிரியர், பத்திரிகையாளர், சிறுவணிகர்கள் ஆகியோரே அரசியலுக்கு அதிகம் வந்தனர். இவர்களுள் வக்கீல்களும் பத்திரிகையாளர்களும் அதிகம் இருந்தனர். 1892-1909 காலகட்டத்தில் காங்கிரசு மாநாடுகளில் கலந்து கொண்ட 13839 சார்பாளர்களில் 480 பேர்கள் வக்கீல்களும் பத்திரிகையாளர்களும் ஆவர் என்பர். இவர்களுள் 3000 பேர்கள் பத்திரிகையாளர்கள் ஆவர். பிராமணக் குடும்பத்தில் பிறந்து, பத்திரிகைத் தொழிலில் இறங்கிய பாரதி, அரசியலுக்கு வந்தது மேற்கண்ட வரலாற்றின் தொடர்ச்சி எனலாம். ஆயின் வெறும் பத்திரிகையே அரசியலுக்கு அழைத்துச் சென்று விட்டதா? இதற்கு அவனது வாழ்க்கை முறையையும் சிந்தனைப் போக்கையும் காணவேண்டும். சீவலப்பேரியின் சீரழிந்த நிலவுடமைக் குடும்பம் எட்டயபுரம் ஜமீனுக்குக் குடிபெயர்ந்தது. சமஸ்தான அலுவலில் உள்ள சின்னச்சாமி ஐயருக்கு 1882 டிசம்பரில் பாரதி பிறந்தார். 1892இல் சின்னச்சாமி எட்டயபுரத்தில் ஒரு பருத்தி அரவை ஆலை வைத்தார். ஆயின் இது 1897க்குள் நொடித்துப் போயிற்று. இது 15வயதுச் சுப்பையாவைப் பாதித்த நிகழ்வு. அவரது வாழ்க்கையை மாற்றி, காசிக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய நிகழ்வு ஆகும். இதற்கிடையில் தந்தையார், பாரதியை எட்டயபுரத்தில் உள்ள ஆங்கிலோ கல்லூரிக்கும் அனுப்பினார். ஆனால் இந்த ஏகாதிபத்தியக் கல்விமுறை பாரதிக்குப்பிடிக்கவில்லை. இது பிற்காலத்தில் எழுதிய சின்னச் சங்கரன் கதை, ஸ்வசரிதை ஆகிய படைப்புகளின் மூலம் மட்மல்லாது அவரது ஆரம்பக் காலத்திய செயல்முறைகளின் மூலமும் தெரிய வருகிறது. நெல்லைக்குப் போகுமுன் ஜமீன்தாரின் சிற்றப்பாவிற்கு (இவரே பிற்காலத்து ஜமீன்தார்) ஒரு கவிதைக் கடிதம் 24-1-1897 அன்று எழுதியுள்ளார். கடுமையான, நல்ல இலக்கணச் சுத்தமான தமிழிலும் எழுதப்பட்டுள்ள அக்கவிதைக் கடிதத்தில், தாய்மொழியில் படிக்கவியலாத தன்மையைக் கூறி வருந்துகின்றார். எனவே எவ்வித உணர்வுபூர்வமற்ற (Unconsciousness) 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/122&oldid=817089" இலிருந்து மீள்விக்கப்பட்டது