பக்கம்:பாரதியம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுகளாகக் கொள்ளவியலும், இதன் பின் 1898இல் காசிக்குச் செல்கிறார். செல்லும்போது, அவர் சிந்தனையில், வறுமை, தொழில், நசிவு, மேற்கத்தியக் கல்விமுறை எதிர்ப்பு ஆகிய அம்சங்களே இருந்தன எனலாம். 1898 முதல் 1903 வரை பாரதி காசியில் இருக்கிறார். 1903 இல் கர்சன் நடத்திய தர்பாருக்கு வந்த எட்டயபுரம் அரசர் பாரதியை அழைத்து வரும் வரை அங்குள்ளார் இது பாரதியின் 16-21 வயதுக்கட்டமாகும். இந்த இளம் வயதுப் பருவத்தில் இவரிடத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. காலத்திற்கு ஒவ்வாத சில பழக்கங்களைத் தம்மளவில் திருத்திக்கொள்கிறார். தன் தலைமுடியைத் திருத்திக் கொண்டு, மீசை வைத்துக் கொள்கிறார். இவரை ஆதரித்தவர்களுக்கு இவை பிடிக்க வில்லையெனினும் இவற்றைத் தொடர்ந்து இவர் கடைப்பிடித்ததை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இது சமூகச் சீர்திருத்தம் குறித்துப் பாரதியின் முதலாவதும் உறுதியானதுமான நிகழ்வு ஆகும். காசி, ஒர் அனைத்திந்திய அளவிலான இந்து சமயச்சார்பு நகரமாகும். இங்கு பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் வந்து கூடுவர். இது பாரதிக்கு ஒருவித இந்து சமய ஒருமைப்பாட்டுக்கான தளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்க வேண்டும். இதுவும் இவரை நீண்ட காலம் பாதித்துள்ளது. மேலும் காசியில் இருக்கும் போது பாரதிக்கு நானாபிரதாப்சிங் போன்ற இந்து சமய மீட்சிவாதக் கருத்தாளர்களின் தொடர்பும் ஏற்பட்டது. இவர்கள் ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தின் ஆளுகையால் இந்தியப் பாரம்பரியக் கலாச்சாரம் அழிந்து போயிற்று என்ற அதை மீட்க வேண்டும் என்ற கருத்தினர் ஆவர். மேற்கத்திய கல்வி முறையின் மீது உணர்வு பூர்வமற்ற எதிர்ப்புக் கொண்டவனாக இருந்த பாரதியை, இது கவர்ந்திழுத்தது எனலாம். இவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை அரசியல் வழியில் விளங்கிக் கொள்ளாது அதைச் சமயம் வழியில் விளங்கிக் கொண்டதனால் பண்டைய நிலவுடமைக் கலாச்சாரத்தின் சாரமான அம்சங்களைத் தூக்கி நிறுத்தினர். இவரிடம் இந்து சமய மீட்சிவாதக் கருத்துக்கள், இறுதி வரை உரம் பெற்றன. ஆயின் பாரதி இத்துடன் நிற்கவில்லை. காசியில் ஷெல்லி நூல்களின் பாதிப்பு அதிகம் இருந்ததெனக் கூறுவர். ஷெல்லி, கலகக்கார 121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/123&oldid=817090" இலிருந்து மீள்விக்கப்பட்டது