பக்கம்:பாரதியம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாத்திகன்; கற்பனாவாதக் கவிஞன்; மார்க்சின் வார்த்தைகளில் கூறினால், உயிரோடு இருந்திருப்பானேயானால் புரட்சிக் கவிஞனாக உயர்ந்திருக்கக் கூடியவன் இக்கவிஞனது சிந்தனைத் தாக்கத்தில் பெண்கல்வி, பெண் முன்னேற்றம் குறித்து சீர்திருத்தக் கருத்துகள் கொண்டிருந்தார்; சிற்சில கட்டங்களிலும் பேசியுள்ளார் எனவும் தெரிகிறது. எனவே சமூக அளவில் இவரது சிந்தனையை, இந்து சமய மீட்சிவாதமும் சீர்திருத்தமும் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் எட்டயபுரம் அரசனுடன் சேர்ந்து தமிழகம் வருகிறார். ஷெல்லியின் கலகக் குணத்தைத் தம்மளவில் ஏற்றுக் கொண்ட பாரதிக்கு எட்டயபுரம் அரசனின் சில எதிர்ப்புகளை நிறைவேற்ற மனமில்லாவிடினும் அவற்றுடன் சமரசமாக்கி கொண்டு உடன் வந்தார். எனவே காசியிலிருந்து திரும்பும்போது சில மாற்றங்கள் அவரிடத்தில் இருந்தன. 1898-இல் தொழில் நசிவினால் ஏற்பட்ட வெறுப்பு, மேற்கத்தியக் கல்வி முறையின் மீதான எதிர்ப்பு ஆகியவையே இருந்தன. இவற்றோடு, இந்துசமய மீட்சிவாதமும் அவரிடம் சேர்ந்து கொண்டன. இப்படி, முரண்பட்ட அம்சங்களின் சேர்க்கையாகவே எட்டயபுரம் திரும்பினார். எட்டயபுரத்தில் 1903 முதல் ஆகஸ்டு 1904 வரை இருந்தார். நாள் தோறும் அரச மாளிகைக்குச் சென்று, அன்றைய பத்திரிகைகளின் செய்திகளைச் சுருக்கமாக அரசனுக்குக் கூறும் செய்தி விளக்குநர் வேலையைச் செய்தார். வேதாந்த நூல்களை ஆய்ந்து, பண்டிதர்களுடன் சர்ச்சை புரிந்து அரசனுக்கு அவற்றின் சாரத்தைக் கூறினார். இங்கே பல அனுபவங்களும் அவற்றின் வழி அகநிலை மனோபாவ மாறுபாடும் அடையப் பெற்றார். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் வரும் பத்திரிகைகளைப் படித்து விளக்கியதனால், நாட்டின் அன்றாட அரசியலைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சமூக சீர்திருத்த வாதியாக இருந்த பாரதியிடத்தில் இத்தகைய அரசியல் நிகழ்வுகள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் அவற்றைப் பற்றி 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/124&oldid=817091" இலிருந்து மீள்விக்கப்பட்டது