பக்கம்:பாரதியம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1904 ஆகஸ்டு முதல் நவம்பர் இடைக்காலம் வரை மதுரையில் இருந்தார். அப்போது மூடசிகாமணிகளின் நrத்திரமாலை என்ற தலைப்பில் பணக்காரர்களின் உண்மை நிகழ்ச்சிகள் குறித்து ஒரு கவிதை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது. எட்டயபுரம் மன்னருடன் அவர் கொண்ட முரண்பாட்டின் விளைவாகப் பெற்ற ஜனநாயக உணர்வு தொடர்ந்து அணையாமல் இருந்ததையும் காண்கிறோம். 10-11-1904 இவ்வேலை நீங்கியபின், மதுரை ஹிந்து பத்திரிகை நிருபரின் பரிந்துரையின் பேரில் சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்த பாரதிக்கு ஆங்கிலம், தமிழ், இந்தி, வடமொழி ஆகிய மொழிகள் தெரியும். பத்திரிகைகளைப் படித்து சுருக்கமாகச் சொல்லும் பணியில் அவருக்குப் பழக்கமிருந்தது. பழமையான சமயக் கருத்தாக்கங்களில் ஆழமான நம்பிக்கை கொண்ட நடுத்தரவர்க்க ஜனநாயகவாதியாக இருந்தார். சென்னையில் அவருக்குக்கிடைத்த பணியும் நண்பர்குழாமும் அவரைச்செழுமைப் படுத்தின. - சுதேசமித்திரன் பத்திரிகையில் மொழிபெயர்ப்பாளராக இருந்த பாரதி காங்கிரசு மாநாட்டு நடவடிக்கைகளையும் தலைவர் உரைகளையும் நாட்டு நடப்புகளையும் தமிழில் கொண்டு வந்தனர். எட்டயபுரத்து அரசனிடம் இருந்த பணி என்றாலும் இதன் மூலம் ஏராளமான விஷயங்களைப் பெற்றுக் கொண்டார். எட்டயபுரத்தில் அவருக்கு வேதாந்தச் சர்ச்சைக் குழு இருந்தது. இங்கே வேறு நண்பர் குழாம் கிடைத்தது. வக்கீல் துரைசாமி, வி.சக்கரை, டாக்டர் ஜயராம், பத்திரிகையாளர் ரகுநாதராவ், வணிகர் ராமசேஷய்யர் ஆகியோர் அடங்கிய நண்பர் குழுவில் இணைந்தார். இவர்கள் எல்லோரும் அக்காலத்தில், பிராமணரல்லாத ஒருவரைக் கொண்டு சமைத்து உண்டனர், இது ஒரு சமூக மீறலாகும். சமூக சமத் துவம், பெண்கல்வி, விதவை மறுமணம் போன்ற கொள்கைகளைப் LJ JüLI 615 fò@5 Redical Social Reform 6Tgštp L1$$) ĵama; gm LI அனைவரும் நடத்தினர். இவர்கள் நாள்தோறும் சந்தித்து, அரசியல் விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடினர். இங்கே நமக்கு முக்கியமானது என்னவென்றால், தம்மளவில் சீர்திருத்தவாதியாகவும் நடுத்தரவர்க்க ஜனநாயகவாதியாகவும் இருந்த பாரதிக்கு, அரசியல் பேசும் குழுவின் தொடர்பு கிடைத்தது. எனவே அறிவுரீதியாக ஓர் 124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/126&oldid=817093" இலிருந்து மீள்விக்கப்பட்டது