பக்கம்:பாரதியம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல்வாதியாக உருவாவதற்குரிய தன்மை பாரதிக்கு வந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில்தான் வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடக்கநிலையாகக் கொண்டு வங்காள நடுத்தரவர்க்கமும் பம்பாய் தேச முதலாளிகளும் இதை எதிர்த்து இந்திய அளவிலான இயக்கமாக மாற்றினர். இளம் வயதில் ஏற்பட்டதொழில் நசிவு உணர்வு, நடுத்தர வர்க்க ஜனநாயக மனப்பான்மை இரண்டும் ஒருங்கே பெற்றிருந்த பாரதி, இந்த இயக்கத்தில் இணைய முடிந்தது. இன்னொன்றுள்ளது. காசியிலிருந்து இவரிடம் தொடர்ந்து உறுதிப்பட்டுக் கொண்டு வந்த இந்து சமய மீட்சிவாதம், மேற்சொன்ன புதிய அரசியல் தலைமையினறான திலகர், லால் போன்றோர் கையாளும் போக்காகவும் இருந்தது. ஆயினும் அவர் தனது சீர்திருத்தக் கருத்துகளையும் விட்டுவிடாது கைக்கொண்டிருந்தார். எனவே இவனது சீரழித்துபோன தொழில் நசிவுக்கான வெறுப்பு, நடுத்தரவர்க்க ஜனநாயக உணர்வு, பண்டைய சமய மீட்சிவாதம் ஆகிய கருத்துக்கள். பத்திரிகைகள் மூலமும் நண்பர்கள் மூலமும் பெற்ற அரசியல் உந்துதலின் வழியாக, வங்கப்பிரிவினை எதிர்ப்பு இயக்கக் காலத்தில், இவரை அரசியல்வாதி ஆக உருவெடுக்க வைத்துவிட்டது. ஆயின் அப்போது இவர் வெறும் எழுத்தளவிலான அரசியல் வாதியாகவே இருந்தார். 14-9-1905 அன்று பொதுக் கூட்டத்தில் வங்கமே வாழிய என்ற கவிதையைப் பாடினார். அப்பாடலில் விஞ்ஞானபூர்வமான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத்துக்கள் இல்லாவிடினும், பாரதியின் அரசியல் பரிணாம வளர்ச்சி ஒரு கட்டத்தைத் தாண்டிவிட்டதைக் குறிக்கிறது. இக்காலத்தில் இவருக்கு சுதேசமித்திரனில் தலையங்கமோ துணைத் தலையங்கமோ அரசியல் கட்டுரைகளோ எழுத வாய்ப்பில்லை. ஏனெனில் பத்திரிகையின் உரிமையாளரான ஜி.சுப்பிரமணிய அய்யர் தீவிரவாதிகட்கும் மிதவாதிகட்கும் நடுநிலையில் நிற்பதாக முதலில் கூறி, பின்னர் மிதவாதிகள் பக்கம் சார்ந்தார். எனவே பாரதியின் புதிய அரசியல் பிரிவை இவரால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. மேலும் பாரதியும் புதிய அரசியலுக்குள் இன்னும் முழுமையாக ஈர்க்கப்படவில்லை. ஆயின் அதே நேரத்தில் சுதேசமித்திரன் 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/127&oldid=817094" இலிருந்து மீள்விக்கப்பட்டது