பக்கம்:பாரதியம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை நடத்திய சக்ரவர்த்தினி இதழில் பொறுப்பாசிரியராக இருந்தார். விக்டோரியா மாராணியின் அறிவும் திறனும் இந்தியப் பெண்கள் அடைய வேண்டும் என்ற நோக்குடன் இந்தப் பத்திரிகைக்கு சக்கர வர்த்தினி என்ற பெயரிடப்பட்டதாக அறிகிறோம். இது முழுமைக்கும் சமரசமாகும். இதில் வெளிவந்த தாதாபாய் நவுரோஜி, கோகலே குறித்த பாரதியின் படைப்புகளில் (செப்டம்ர், டிசம்பர், 1905) மிதவாதப் போக்கு குறித்த விமரிசனம் எதுமில்லை, ஆயின் அரசியல் கட்டுரையாளராகப் பாரதி உருவாகிவிட்டார் என்று அறிகிறோம். அதே நேரத்தில் வங்காள அரசியல்வாதிகளின் முழக்கமானவந்தே மாதரம் என்பதையும் அதன் மூலப்பாடலான பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் எனும் கீதத்தையும் மொழி பெயர்த்தார். (சக்ரவர்த்தினி 25-12-1905) இது பாரதியின் அரசியல் பயணத்திசைவழியை நமக்குச்சுட்டி நிற்கின்றது. இத்தகைய நேரத்தில் - டிசம்பர் 1905இல் காங்கிரசு மாநாடு காசியில் நடக்கிறது. இதற்குப் பாரதி சென்றார் என்ற கருத்து ஒன்றுண்டு. ஆயின் 1905ஆம் ஆண்டு காங்கிரசு மாநாட்டுச் சார்பாளர்கள் பட்டியலைப் பார்க்கும்போது, சென்னை மாகாணத்திலிருந்து சென்ற 66 நபர்களில் பாரதியின் பெயர் இல்லை. ஆயின் 1905இல் பூனாவில் திலகரைச்சந்தித்ததாக உள்ள குறிப்பையும் (இந்தியா) அலமாடாவில் நிவேதிதாவைச் சந்தித்ததையும் வைத்துப் பார்க்கும் போது 1905 மாநாட்டில் கலந்திருக்கலாம் எனவும் கொள்ளலாம். ஒருவேளை பத்திரிகை நிருபராகச் சென்றிருக்கலாம். இவ்விருவருடனான சந்திப்புகளும் இவரது அரசியல் வாழ்க்கையை உறுதிப் படுத்திவிட்டது. திலகரின் சந்திப்பு இவரை மிதவாதிகளுக்கு எதிராகவும், தீவிரவாதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் சட்டபூர்வமான ஜனநாயகத்தில் திருப்பியது; நிவேதிதாவின் தொடர்பு, தெய்வபக்தியும் தேசபக்தியும் இணைந்த தன்மையையும் இவரிடத்தில் ஏற்படுத்தியது. இவ்வாறு சுதேசமித்திரனில் நிலைகொள்ளாது இருந்த நேரத்தில்தான் இவருக்கு இந்தியா பத்திரிகையின் தொடர்பு கிடைக்கிறது. மைசூர் வித்வான் பரம்பரையும் எஸ்டேட்களுக்கு உரிமையாளரும் ஆன மண்டபம் குடும்பத்தார் நடத்திய பத்திரிகை இந்து. சமாதானக்கலாச் சாரத்தைத் தூக்கி நிறுத்தவும் ஏகாதிபத்தியத்தின் கலாச்சார 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/128&oldid=817095" இலிருந்து மீள்விக்கப்பட்டது