பக்கம்:பாரதியம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீரழிவிலிருந்து இந்தியாவை மீட்கவும் உறுதி பூண்ட இவர்கள், சென்னையில் முதன் முதலில் அச்சுத் தொழில் நடத்துபவர்களாகவும் வக்கீல் தொழில் புரிபவர்களாகவும் வணிகர்களாகவும் இருந்தனர். மீட்சி வாதத்திலும் சட்டபூர்வமான ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்ட இக்குடும்பத்தினர் நடத்திய இந்தியா பத்திரிகை, ஒரு திறமையான, தம் அரசியலை ஏற்றுக்கொண்ட பத்திரிகையாளரைத் தேடியது; பாரதியும் தன் மாறுபட்ட கருத்துகளை எழுதுவதற்கு ஒரு பத்திரிகைத் தளம் தேடினார். இரண்டு தேடல்களின் சங்கமமே பாரதியின் இந்தியா ஆகும். இதன் விளைவாகப் பிரிட்டன் காலனிய அதிகாரத்துவம் அஞ்சக்கூடிய அளவிற்குக் கூர்மையான அரசியல் கலைஞனாகப் பாரதி பரிணமித்தார். இதுவரை வெறும் அரசியல் பத்திரிகையாளராக இருந்த பாரதி இப் போது இயங்கத் தொடங்குகிறார். புதிய கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக நடுத்தரவர்க்க இளைஞர்களையும் மாணவர்களையும் திரட்டும் பணியில் ஈடுபடுகின்றார். கடற்கரையில் தினந்தோறும் இவர்களைக் கூட்டிப் பேசுகின்றார். சில மறைமுக அமைப்புகளை வைத்துக் கொண்டு. இளைஞர்களைத் திரட்டுகின்றார். அவற்றுள் ஒன்று திருவல்லிக்கேணி காற்பந்தாட்ட இளைஞர் சங்கம் என்பதாகும். மாலை வேளையில் இந்த இளைஞர்கள் கடற்கரையில் பந்தாடி முடிப்பர்; பின் பாரதி அங்கு சென்று அரசியல் பேசுவார். சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்களில் சென்று அரசியல் கூட்டங்களில் பேசுவார். இவரும் இவரது புதிய கட்சி நண்பர்களும் சேர்ந்து பாலபாரத சங்கம் என்ற அமைப்பை நிறுவி, சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளனர். இதன்சார்பாக பாரதபந்தர் என்ற சுதேசியக் கடையையும் நிறுவினர். இவ்வாறு இவரது அரசியல் அமைப்பாளர்(Political organiser) வாழ்க்கை உருவெடுத்து விட்டது. எனவே பாரதியிடம் இருந்த தொழில் நசிவுக் கருத்துகள், சீர்திருத்தப்போக்கு, நடுத்தரவர்க்க ஜனநாயகப் போக்கு, பாரம்பரிய சமய மீட்சிப்போக்கு ஆகியவையும் சென்னைப் பத்திரிகைகள் வழி ஏற்பட்ட அரசியல் அறிவும் முற்போக்கு (Redical) எண்ணம் கொண்ட நண்பர்களின் வழி பெற்ற அறிவும் இணைந்து அவரது அகநிலை மனோபாவமாக உருவாகிச் செழுமையடைந்து, 1905இன் வங்கப்பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடக்கமாக 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/129&oldid=817096" இலிருந்து மீள்விக்கப்பட்டது