பக்கம்:பாரதியம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதன்பின் ஈராண்டுகள் எந்தவொரு பாரதி நூலும் பிரசுரமாகவில்லை. ஈராண்டுகள் இடைவெளிக்குப் பின் - அதாவது 1914ஆம் ஆண்டில் சேர்ந்தாற்போல் மூன்று நூல்கள் வெளியாகின்றன. மாதாமணிவாசகம் என்னும் நூல் “பூரீமத் ஸி.சுப்பிரமணிய பாரதியவர்களால் டர்பன் சரஸ்வதி விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது” என்ற வாசகத்துடன் தென்னாப்பிரிக்காவில் வெளியாயிற்று. மற்றும் ஒளவைப்பெருமாட்டியின் ஒப்பற்ற நீதிநூல் களஞ்சியமாம் ஆத்திசூடிப் பாணியில், காலதேச வர்த்தமானங்களுக் கேற்பப் படைத்தளித்த" புதிய ஆத்திசூடி” நூல் வெளியிடப்பட்டது. இதன்னியில், அக்கால அரசியல் போக்கை விளக்கி ஆங்கிலத்தில் group3 u The Fox with the golden Tail grairsp fligyub Glouciusrā), மிகுந்த பரபரப்பை உண்டாக்குகிறது. 1914க்குப்பின் மூன்றாண்டுகள் பிரசுர முயற்சியில் தேக்கநிலை காணப்படுகிறது. இந்த நிலையில், பாரதியாரின் முதல் பதிப்பாளராக 1917லே பரலி சு. நெல்லையப்பர் அறிமுகமாகிறார். பாரதியார் பாடகளைக் காது படைத்த மக்களெல்லாம் கேட்க வேண்டும், வாயுள்ள மக்களெல்லாம் பாடி மகிழ வேண்டும் என்ற ஆசைப்பெருக்கால் உந்தப்பட்ட நெல்லையப்பர் தொடர்ந்தாற்போல கண்ணன்பாட்டு, நாட்டுப் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு ஆகிய நான்கு நூல்களை வெளியிட்டுப் பாரதிக்குப் பெருமை சேர்த்தார். பாரதியாரை மகாகவியாக்கும் பணியில் பெரிதும் ஈடுபட்ட இப்பெரியவரும், பின்னாளில் ஏனோ தொடர்ந்து பாரதியின் நூல் பிரசுர முயற்சியில் ஈடுபடவில்லை. பரலி சு. நெல்லையப்பருக்குப் பின், 1918இல் சுதேசமித்திரன் புத்தக சாலைப் பிரிவு பாரதியாருடைய எழுத்துக்களை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. அப்புத்தகாலயப் பிரிவு மகாகவி ஸ்ர்.ரவீந்திநாத்தாகூர் அருளிய ஐந்து கட்டுரைகளின் பாரதியின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பஞ்சவியாலங்கள் என்ற பெயரிலும், பிரபல இந்திய விஞ்ஞானி ஜகதீசசந்திரவஸ செய்தருளிய சொற்பொழிவின் தமிழாக்கத்தை ஜீவவாக்கு என்ற பெயரிலும் வெளியிட்டுப் பாரதியின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த வரிசைநூல் வெளியீடுகள் பாரதியின் மொழிபெயர்க்கும் திறனைப் பறைசாற்று 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/13&oldid=817097" இலிருந்து மீள்விக்கப்பட்டது