பக்கம்:பாரதியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்துச் செழுமையடைந்த தேச முதலாளிகள் - நடுத்தரவர்க்க; கீழ்தட்டுப் பிரிவினர் ஆகியோரது இயக்கமான தீவிரவாதப்பிரிவின் அரசியல் சிந்தனைத் தளமாக மாறின எனலாம்; பாரதியும் அரசியல் சிந்தனையாளர் ஆனார். எதையும் தீட்சயண்யத்துடனும் தெளிவாக வும் அறிந்துகொள்ளும் கலகக்காரரானபாரதி மேலே மேலே சென்று, அரசியல் அமைப்பாளராகவும் ஆனார். இத்தகைய அகநிலை மனோபாவ வளர்ச்சியே, அரசியல் புறநிலை உலகில் அவரைத் தீவிரவாதியாக நிறுத்திற்று. எனினும் இங்கே ஒன்றை அவசியம் கவனித்தாக வேண்டும். திலகர், விபின் சந்திரபாலர், லாலாலஜபதிராய் ஆகிய அரசியல் வாதிகள், பத்திரிகையாளர்களாகவும் அமைப்பாளர்களாகவும் விளங்கியதை அறிகிறோம். பாரதி இவர்களைப் போன்று இருதரப்பிலும் பணிபுரிந்தாலும், இவர்களிடமிருந்து வேறுபட்டே காணப்படுகின்றார். இவர்கள் தம்மளவிலான அகத்தெழுச்சியின் மூலமாக மட்டுமன்றி, மக்கள் திரள் போராட்டங்கள்ன் வழியிலும் அரசியலில் ஈடுபட்டனர்; ஆகவே நீண்ட காலத்துக்கு அரசியலில் நிற்க முடிந்தது. இவர்கள் வெறும் அறிவுரீதியாக மட்டுமே இராது, செயல் முறைகளிலும் ஈடுபட்டுத்திறம் பெற்றனர். ஆயின் பாரதி வெறும் தம்மளவிலான சிந்தனா பூர்வமாகவே அரசியலில் நின்றவர். ஆனால் வ.உ.சி. திலகர், லால், போன்றோர் பல்வேறு செயல்பாடு களின் மூலமாகவும் நடுத்தரவர்க்க தேசமுதலாளியப் பிரச்சனைகளை எடுத்துச் செயல்பட்டதன் மூலமாகவும் அரசியலில் நின்றவர்கள் ஆவர். இவர்கள் ஏகாதிபத்தியத்தின் சட்டங்களைப் பயன்படுத்தி அதை அம்பலப்படுத்த முடியும் என்ற மாயை உணர்வைக் கொண்டிருந்தனர். ஏகாதிபத்தியம், பழைய சட்டங்களை உரித்துவிட்டுப் புதிய சட்டங்களை நிறைவேற்றியபின் இவர்கள் செயலிழந்து போயினர். ஆனால் பாரதி வெறும் சிந்தனா பூர்வமாக அரசியலில் நின்று வளர்ந்தவர் என்பதால், அவருக்குச் சிறிது காலத்துக்குமுன்பே இத்தன்மை வந்துவிட்டது. அவரது எழுத்தையும் இயங்குதலையும் தடை செய்தபின், அவருக்கு எவ்விதத் தளமும் இல்லை. ஏனெனில் அவர் சிந்தனை அளவில் மட்டுமே நின்றவர் பெரிதும் செயல் அளவில் நின்றவர் அல்லர் தனிமனித அளவில் ஏற்றுக்கொண்டவர்; மக்கள் மயமாக்கும் முயற்சியில் அவருக்குப் பெரிதும் இடமில்லை. இப்படித் தனிமனித அறிவார்ந்த நிலையில் 128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/130&oldid=817098" இலிருந்து மீள்விக்கப்பட்டது