பக்கம்:பாரதியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய ஆங்கில இலக்கியமும் பாரதியும் இந்திரன் 1835ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் தேதியன்று கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங் கொண்டுவந்த ஒரு தீர்மானம், அரசு உதவிபெறும் எல்லா இந்தியப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை போதனை மொழியாக்கியது. இந்தியாவை அதன் மூடநம்பிக்கையின் இருளிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் பூண்ட ராஜாராம் மோகன் ராய் போன்றவர்கள் ஆங்கிலக் கல்வியின் மூலமாகத்தான் சமூகச் சீர்திருத்தம் கைகூடும் என்று நம்பினார். ஆங்கிலக் கல்வியை இந்தியாவிற்குக் கொண்டுவருமாறு பிரிட்டிஷ் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார் ராஜராம் மோகன்ராய். இதனால் ஊக்கப்படுத்தப்பட்ட, பாடமொழிக் குழுவின் தலைவராக இருந்த தாமஸ் பேபிஸ்டன் மெக்காலே, அராபிய, சமஸ்கிருத மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலமே இந்தியப் பொதுமக்களின் அறிவை விசாலப்படுத்தும் என்று வலியுறுத்தினார். “இந்தியப் பொது மக்களின் மூளை நமது (கல்வி) முறையின் கீழ், நமது முறையையே lso sust(5th garajá(5 6,167(51b.” (It may be that the public mind of India may expand under our system till it has out grown that System1) என்று 1833-ல் பிரிட்டிஷ் மக்கள் சபையில் பேசினார். இவற்றின் விளைவாக இந்திய மாணவர்களின் மூளையை உருவாக்கும் பொறுப்பு முழுமையாக ஆங்கில மொழியின் கையில் கொடுக்கப்பட்டது. 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/132&oldid=817100" இலிருந்து மீள்விக்கப்பட்டது