பக்கம்:பாரதியம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் இதற்கு ஒரு தலைமுறைக்கு முன்னரே 'இந்திய ஆங்கில இலக்கியம்’ எனும் புதுமலர் ஒன்று இந்திய மண்ணில் அரும்பத் தொடங்கி விட்டது. ரயில் பயணம் அரசாங்க வேலை, கிரிக்கெட் விளையாட்டு ஆகியவற்றின் மீது இந்தியர்களுக்கு ஏற்பட்ட மோகங்களுடன், ஆங்கிலத்தில் இலக்கியம் படைக்க வேண்டும் எனும் மோகமும் சேர்ந்து கொண்டது. இந்த ஆரம்பகாலப் படைப்புகள், பிரிட்டிஷ்காரர்களே தங்களது வாசகர்கள் என்ற கவனத்துடன் படைக்கப்பட்டவை. ஆங்கிலம் கல்வி மொழியாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்திய ஆங்கில இலக்கியம் புதுக்கிளர்ச்சி அடைந்தது. பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே இதன் வாசகர்கள் என்ற நிலை மாறி, ஆங்கிலம் அறிந்த இந்தியர்களும் இதன் வாசகர்கள் என்ற நிலை தோன்றியது. பொது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு களமாக இந்திய ஆங்கில இலக்கியம் வளர்ந்தது. ஹென்றி டிரோஸியோ (1809 - 31), ரோமேஷ் சந்தர் தத் (1848 - 1909) அருதித் (1854 - 74) தொரு தத் (1856 - 77) இரவீந்திரநாத் தாகூர் (1861 - 1941), மன்மோகன் கோஷ் (1867-24), அரவிந்தர் (1872-50), சரோஜினி நாயுடு (1879 - 49), ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா என்று ஆங்கிலத்தில் இலக்கியம் படைக்க கற்பனைத்திறம் மிக்க பலர் அணி திரண்டனர். இன்று எந்த தேசிய ஒருமைப்பாட்டைக் காரணம் காட்டி இந்தி திணிக்கப்படுகிறதோ அதே தேசிய ஒருமைப்பாட்டை மனதில் கொண்டு, ஆங்கிலேயர்களின் எதிர்ப்பாளர்களும் கூட இந்தியஆங்கில இலக்கியத்தை உருவாக்குவதில்துணை நின்றனர். இத்தகைய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து, அந்த காலத்தின் எல்லா பாதிப்புகளுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்ட மகாகவி பாரதியும் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். அரவிந்தரும், எம். ரிச்சர்டும் சேர்ந்து நடத்திய, “ஆர்யா எனும் தத்துவ ஆங்கில ஏட்டில் தொடர்ந்து எழுதினார். மேலும் 'நியூ இண்யா (New.india), தி காமன்வீல் (The Common Wheel) ஆகிய ஏடுகளில் எழுதினார். பாரதியின் ஆங்கில எழுத்துக்கள் கதை, கவிதை, கட்டுரை, மொழி பெயர்ப்பு என்று பல்வகைப்பட்டவை, எண்ணிக்கையில் குறைவாக 131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/133&oldid=817101" இலிருந்து மீள்விக்கப்பட்டது