பக்கம்:பாரதியம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பினும், ஒசை ஒழுங்குள்ள கவிதைநடை, உரைநடை ஆகிய இரண்டையும் திறம்படக் கையாண்டுள்ளார். இவற்றில் சில Agni & other poems and translations' stärpjub Essays & other prose fragments என்றும் இரு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு வினா எழுகிறது. தன் தாய்மொழியான தமிழின் தாழ்வாரத்தில் முழுச் சுதந்திரத்துடன் தவழ்ந்து, மொழியைத் தான் விரும்பியபடியெல்லாம் ஏவல் கொள்ளும் வல்லமை வாய்க்கப் பெற்ற மகாகவி, ஏன் தனக்கு அயலான ஒரு மொழியில் எழுதத் தொடங்கினார்? மேலும் பாரதி ஆங்கிலக்கல்வியின் முதல் எதிரி. தற்காலத்தில் நமது தேசத்துப் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்படும் இங்கிலீஷ் படிப்பு, சுத்தமாகப் பிரயோஜனம் இல்லை என்று ஸ்பஷ்டமாக விளங்குகிறது' என்று எழுதியவர். ஆங்கிலக் கல்வி வாழ்க்கையைப் பற்றி எதும் கற்றுத்தருவதில்லை என்று வக்கணை சொன்னவர். 'இங்கிலீஷ் படித்து அதிகாரம் செய்வதைவிட தமிழைப் போற்றி அதிகப்படுத்துவது நல்லது' என்று நம்பியவர். இத்தகைய ஒரு மகாகவி ஆங்கிலத்தில் எழுதப்பட்டது எவ்வாறு? இந்த இடத்தில் பாரதியின் ஆங்கிலப் புறக்கணிப்பு பற்றி ஒன்றைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். தன்னை அடிமைப் படுத்திய ஆங்கிலேயரின் மொழி ஆங்கிலம் என்பதாலும், ஆங்கிலப் படிப்பு அடிமைப்பட்ட இந்தியர்களை மேலும் அடிமைப் படுத்திவிடும் என்று அஞ்சியதாலும் பாரதி ஆங்கிலத்தைக் கல்வி மொழியாக நிராகரித்தார். ஆனால் அவர் அடிப்படையில் ஒர் உலக மனிதன். தமிழ்நாடு, தமிழ், இந்தியர்கள் என்று நினைத்த போதிலும், 'மானுடசாதி ஒன்று; மனத்திலும், உயிரிலும், தொழிலிலும் ஒன்றேயாகும்’ என்பதை நன்கு உணர்ந்தவர். தன் பெயரைச் ஷெல்லிதாசன் என்று வைத்துக்கொள்ளுமளவுக்கும், 'ஷெல்லி கழகம் என்ற ஒன்றை அமைக்கும் அளவுக்கும், ஆங்கிலக்கவி ஷெல்லியினாலும் வால்ட் விட்மனினாலும் பாதிக்கப்பட்டவர். 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/134&oldid=817102" இலிருந்து மீள்விக்கப்பட்டது