பக்கம்:பாரதியம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி ஆங்கிலத்தில் எழுதப் புகுந்தது, ஆன்மிக அனுபவத்தின் ஒரு பரவலான வெளிப்பாட்டிற்காக என்று சொல்லலாம். utúðuisit Agni and other poems தொகுப்பிலுள்ள அவர் மொழி பெயர்ப்புகளைப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியும். அதில் 3 நாச்சியார் திருமொழி, 4 நம்மாழ்வார் திருமொழி, 2 அருணகிரிநாதர் திருப்புகழ் ஆகியவை உள்ளன. அவரே மொழிபெயர்த்த அவரது சொந்தக் கவிதைகளில் கூட, 7 பாடல்களில் பெண்கள் விடுதலைக் கும்மி எனும் பாடலைத்தவிர மற்றவை அனைத்தும் ஆன்மீக சம்பந்தமுள்ளவைகளாக இருப்பதைக் காணலாம். அவரது வசன ffasts, le · @Guo Blunting the imagination, Sidha literature, The crime of caste. The place of woman, Love & Marriage என்று பல்வகை பிரச்சினைகள் அலசப்படுகின்றன. மேலும் பாரதியின் ஆங்கிலப்பிரவேசத்திற்கு மற்றுமொரு மறைமுகத் துண்டுகோல் கவியரசர் இரவீந்திரநாத் தாகூர். "கீர்த்தி அடைந்தால் மஹான் ரவீந்திரரைப்போல அடையவேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா. ஆசியா முழுவதுமா? ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், பூமண்டலம் முழுவதும் பரவின கீர்த்தி. அவர் பாடிய பாட்டுக்கள் வங்கத்தில் உள்ளன. வெறும் மொழிபெயர்ப்பு களைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான் இந்த கீர்த்தி' என்று எழுதுகிறார் பாரதி. நோபல் பரிசு பெற்ற ஆசியாவின் ஒரே நூலான கீதாஞ்சலி ஒரு மொழி பெயர்ப்புத்தான் என்பது பாரதியை வெகுவாகப் பாதித்திருக்கிறது. மேலும் அரவிந்தர் வங்காளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். தாகூரின் கீதாஞ்சலி மூலத்தையும், ஆங்கில மொழிபெயர்ப்பு களையும் பார்த்து அதன் குறைநிறைகளை அறிந்தவர் மூல கீதாஞ்சலியில் இல்லாத பல பாடல்கள் நைவேத்யா, கேயா, 'கீதமால்யா ஆகிய தாகூரின் பிற நூல்களிலிருந்து எடுக்கப்பட்டு ஆங்கில கீதாஞ்சலியில் சேர்க்கப்பட்டது போன்றவற்றை நன்கு slogaui. Tegore's Gitanjali is most un - English, yet it overcame this obstacle என்று ஒருமுறை எழுதியவர். அரவிந்தருடன் பழகி

  • Achivement of Indo- English poetry - (1935) - Sri Aurobindo.

134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/136&oldid=817104" இலிருந்து மீள்விக்கப்பட்டது