பக்கம்:பாரதியம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவை அனைத்தையும் அறிந்திருந்த பாரதி, தமிழ்க்கவிதைகளை மொழிபெயர்த்து உலகத்துக்குக் காட்ட ஆவல் கொண்டார். இந்த வல் செயல்பட்டதின் காரண்மாக, தென்னிந்தியாவின் இந்திய - ஆங்கில இலக்கியத்தின் பிதாமகர்களில் பாரதியும் ஒருவர் எனும் பெருமைக்குரியவர் ஆகிறார். எண்ணிக்கையில் குறைந்த, மூலப்படைப்புகளாக இல்லாத பாரதியின் கவிதைகளுக்கு எப்படி இந்திய - ஆங்கில இலக்கியம் எனும் அந்ததஸ்தை கொடுக்கலாம் எனும் கேள்வி எழலாம். 1907-ல் கேம்பிரிட்ஜில் எட்வர்ட்ஃபார்லி ஒட்டன்ஸ் (Edward FarleyOatens) என்பவர் எழுதிய இந்திய ஆங்கில இலக்கியம் பற்றிய பரிசுபெற்ற கட்டுரை ஒன்றில் மைக்கேல் மதுசூதன் தத் எழுதிய Is this called civilization? (கல்கத்தா 1871) எனும் வங்காள மொழியிலிருந்து செய்யப்பட்ட மொழிபெயர்ப்பை 'Anglo - Indian Work என்றே வாதிடுகிறார்." மற்றவர்களுக்கு வழிகாட்டியாக "English in India" எனும் நூலை எழுதிய பேராசிரியர். வி.கே.கோகக் (V. K. Giokak) இத்தகைய இலக்கியங்களுக்குத்தனி அந்தஸ்து உண்டென்று கொண்டாடுகிறார். Índian literature in translations srcito Sesfl SlSSutulb 15 fl$5] osavs Epitï. Lei@ab esiali “translations by indians from Indian literature in to English” argruous amp Indo - English arsyth பதத்தினால் சுட்டுகிறார். இந்த வகையில்தான் பாரதியும் இந்திய - ஆங்கில இலக்கியத்தின் ஆதிகர்த்தாக்களில் ஒருவராக இடம் பெறுகிறார். இங்கு மொழிபெயர்ப்புக் கலை பற்றிய முக்கியமான ஒரு விதியை பாரதி மீறுவதைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். உலக இலக்கியத்தின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்புகள் அனைத்தும், பிறமொழிகளிலிருந்து தன் தாய் மொழிக்குக் கொண்டு வந்தவையாகவே அமைகின்றன இந்நிலையில் தன் தாய்மொழிப் பாடல்களை, தனது அந்நியமொழியான ஆங்கில மொழியில்

  • Indo- English Literature - Sujit Mukherjee (p.19) - Macmillan.

4 English in India (P.161) - Prof. V.K. Gokak, 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/137&oldid=817105" இலிருந்து மீள்விக்கப்பட்டது