பக்கம்:பாரதியம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காக்கை குருவி எங்கள் ஜாதி” டாக்டர் கே.செல்லப்பன் தன்னை எல்லையறு பரம்பொருளாக நினைத்த பாரதி, எங்கெங்கு காணினும் தன்னையே, தன் இனத்தையே, எல்லையற்ற “தனது விரிவையும், விளக்கத்தையுமே கண்டார். பாரதியின் புதிய அத்வைதம், 'காக்கையையும், குருவியையும், நீள் கடலையும், மலையையும், மானிடத்தோடு இணைத்த புதிய சகோதரத்துவமாக, ஆத்மீகக் குடியரசாக மலர்ந்தது. அந்த எல்லையற்ற ஒருமைதான் ஆத்மாவின் நிரந்தர உண்மை; (சத், சித்); அதன் வெளிப்பாடு களியாட்டம் (ஆனந்தம்) 'நாமன்றி வேறில்லை’ என்ற பேதமற்ற நிலையில் ஆத்மாவின் தனித்தன்மையையே (Personal identity) பொதுத்தன்மை (Collective identity) யாகக் கண்டதனால்தான், பாரதியின் பாடல்களின் தலைமைப்பொருள் (Protagonist) ‘நாம்”, ‘எங்கள் என்ற பன்மை நிலைபெறுகிறது. ஆத்மா - பரமாத்மாவின் ஒன்றிய நிலையின் வெளிப்பாடு இது. நீள் கடலும், மலையும், காக்கையும், குருவியும், நானும், நானல்லாததும், 'நானே' என்பதும்தான் இதன் உட்பொருள். ஒரு நிலையிலே மற்றவற்றை நீள்கடலையும், மலையையும் பரம்பொருளாகக் கண்டால், காணுவதும் பரம்பொருளேயாதலின், கவிஞர் தன்னையே புறமாகக் காண்கிறார். பாரதியின் பாடல்களிலேதான் இந்த இரண்டு பண்பின் இணைந்த நிலையைக் காண முடிகிறது. ‘நாதமடி நீயெனக்கு, நல்ல உயிர் நானுனக்கு என்ற பாடலிலே நீயும் நானும் , இப்படி 137

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/139&oldid=817107" இலிருந்து மீள்விக்கப்பட்டது