பக்கம்:பாரதியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்றன. தாய்த்தமிழகத்தில் வெளியான நூல்களைக் கண்டதும் பாரதிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். இதன் பின்னர் மிகுந்த உற்சாகமடைந்து, எப்போதோ அத்தி பூத்தாற்போல நூல்கள் பிரசுரமாவதைத் தவிர்த்து, தொடர்ந்தாற் போல வெளிவர வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்துகிறார், பாரதி. பின்னாளில் தமிழ் எழுத்தாளர்களில் மூத்தவர் என வருணிக்கப்பட்ட வ.ரா. எனப் பெறும் திருப்பழனம் வ. ராமஸ்வாமி அய்யங்கார் என்பார் பாரதி நூல்கள் வெளியீடு தொடர்பாகத் தாம் உதவுவதாக வாக்களித்திருப்பார்போலும்! எனவே வ.ரா. அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டி, தமது இளைய சகோதரர் சி. விசுவநாதஐயருக்கு 1918 ஆகஸ்டு 3ஆம் தேதி கடிதம் எழுதி வ.ரா, அவர்களிடம் தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்கிறார். பாரதி நூல்கள் வெளியிடுவதில் திரு.வ.ரா. அளித்த வாக்குறுதிகளைப் புலப்படுத்தும் கடித வாசகங்கள் இவைதாம்: “....திருப்பயணம் வி. ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் விநாயகர் ஸ்தோத்திரம் (தமிழ் நூல்) அச்சிட வாங்கிக்கொண்டு போனார். இன்னும் அச்சிட்டனுப்பவில்லை. மேலும், அவர் "பாஞ்சாலி சபதம்” அச்சிடும் சம்பந்தமாகப் பணம் சேகரித்துப் பட்டணத்துக்கனுப்புவதாகச் சொன்னார். அங்ங்னம் அனுப்ப முடியுமானால், உடனே புதுச்சேரியில் எனது விலாசத்துக் கனுப்பும்படி ஏற்பாடுசெய். அது மாத்திரமேயன்றி "விநாயகர் ஸ்தோத்திரம்” வேலையை விரைவில் முடித்துப் புஸ்தகங்கள் அனுப்பும்படி சொல்லு.” கடிதத்தில் கண்டபடி வ.ரா. உதவினாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், பாரதியார் தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இரு நூல்களும் 'விநாயகர் ஸ்தோத்திரம்” “விநாயகர் நான்மணி மாலை'யாகவும், பாஞ்சாலி சபதம் - இருபாகங்களும் இணைந்த தொகுதியாகவும் மகாகவி மரணம் கடந்த பின்னர்தான் வெளியாயின என்பதும் கவனிக்கத்தக்கது. 1908முதல் 1914வரை சொந்தமாகவே நூல்களை நண்பர்களின்துணை கொண்டு பிரசுரம் செய்த பாரதியாருக்கு 1917ல் பரலி சு.நெல்லை யப்பர் பதிப்பாளராக வாய்த்தும், 1918ல் சுதேசமித்திரன் புத்தக 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/14&oldid=817108" இலிருந்து மீள்விக்கப்பட்டது