பக்கம்:பாரதியம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுபட்ட ஒருமையினைத்தான் குறிக்கின்றன. நீயும் நானும் நாதமும் நல்ல உயிரும் போல என்ற மேலெழுந்தவா ஒப்புமையோடு, 'நீ எனக்கு நாதம்; நான் உனக்கு நல்ல உயி: என்றபோது, 'நீ யை “நானின் தனித்த, ஆனால் பிரிக்கமுடியாத சக்தி நிலையாகக் காட்டுகிறார். இந்தப் பாடலை, கவிஞர்தன் அகத்தோடு, அதன் ஆழ்நிலைப் பெண்மையோடு பேசுவதாகவும், அந்த இருவர் உறவு அண்டசராசரங்களில் ஊடு நடமாடும் சிவ (நல்ல உயிர்) சக்திக் (நாதம்) காதலின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். பாரதி, பறவைகளை இறைமையையும் தன் இதயத்தின் ஆழ்நிலையையும் இணைக்கும் உருவகங்களாகக் கண்டதால், அவற்றோடு இந்த அளவு உறவாடுகிறார். பறவைகளது மொழியிருந்தால், அந்தப் பரந்து விரிந்த ஆனந்த உலகத்தோடு முழுமையாக ஒன்றிவிட முடியுமே என ஏங்குகிறார். ‘எழு, விழி, பற’ எனச் சொன்ன பாரதி இந்த உலகில் ஏங்கியதெல்லாம் சிறகுகளுக்காகவே. கவிஞர்களுள் காக்கையை மிகவும் சிறப்புச் செய்தவர் பாரதியே. காக்கை வலிய பறவை. அது நம்மைக் காக்கிறது. அதை நாம் கும்பிட வேண்டும் என தன் விளக்கம் என்ற கட்டுரையில் குறித்துள்ளார். காக்கையின் சிறகுகளின் நிறத்திலே, நந்தலாலாவின் கருமையினைத் தரிசித்த மகாகவி எத்தித் திருடினாலும் அதற்கு இரக்கப்பட வேண்டும் எனக் குறித்துள்ளார். காக்கையை, சமத்துவம் - சகோதரத்துவத்தின் உருவகமாக, அவர் கருதியிருக்க வேண்டும். பறவைகளில் சிட்டுக்குருவி அவரைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. சின்னஞ்சிறு குருவியை எல்லையற்ற ஆத்மாவின் ஆனந்தமாக, கட்டுகளை விட்டுத்திரியும் விரிவாக, கட்டுகள், ஜாதிகள், எல்லைகள் இவற்றைத் தாண்டி வாழ்வு மகாசமுத்திரத்தில் அத்துணையும் சங்கமமாகத் துடிக்கும் சமத்துவ நெஞ்சின் வேட்கை நிறையாகக் கண்டுள்ளார். இதையே, தெளிவாக“விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த சிட்டுக்குருவியைப் போல’ என்ற வரிகளில் குறிக்கிறார். "சின்னஞ்சிறு குருவி போல் நீ திரிந்து பறந்து வா பாப்பா” என்ற பாரதியின் வரிகளிலே சின்னஞ்சிறு குருவி, சின்னஞ்சிறு குழந்தை ஆகியவற்றின் இயல்பான ஆத்மீக ஒருமையை மிக இயல்பாகக் குறித்துள்ளார். 'திரிந்து பறந்து வா என்ற இசை நிறைந்த சாதாரணச் சொற்கள், குழந்தையின் இயக்கத்தில் இந்த ஆனந்த விரிவிருப்பதைச் 138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/140&oldid=817109" இலிருந்து மீள்விக்கப்பட்டது