பக்கம்:பாரதியம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில், மாயக்குயில் என பல நிலையில் குறிப்பிட்டிருப்பது இறைவன் 'மாயை' சக்தியால் வையத்தை இயக்குவதை எடுத்துக்காட்டுகிறது. குயில் உண்மையா, பொய்யா என்ற கேள்வி கேட்கும்போது இந்தக் காட்சி வையம் உண்மையா, மாயையா என்பதுதான் வினவப்படுகிறது. இந்தப் படைப்பே மாயை, இன்னொரு நிலையிலே, சித்தாந்தப் பார்வையிலே, குயிலை ஜீவாத்மாவாகக் கொள்ளலாம். அப்படியானால், அது தனது 'பதியை', 'தானை'த் தேடி அலைகிறது. மானுடம், குரங்கனும், 'பக'வும் “பாசமும்’-அல்லது, 'புலனுகர்வு நிலை (Sensuousness) அறிவுநிலை (intellect) இவற்றைத் தாண்டியபின் ஜீவாத்மா ‘தானாகிறது. குயிற்பாட்டை இந்த நிலையில், ஆத்மாவுக்கும் affolgoséðið (BLáðth BTLâlb (The dialogue between the self and soul) assié 65mgiraraomb, Gujab, ouds; (Soul or feminine principle) கலைஞன் ஜீவன் (Self or Purusha). இவை ஒன்றையொன்று சார்ந்தே, உணர்ந்தே முழுமை பெறுகின்றன, குயில் முதல் நிலையில் “அலைகின்ற மனமாகவும்', இறுதியில் அழியாத ஆத்மாவாகவும் காட்டப்பட்டுள்ளது. மனம் புலன்கள், அறிவு நிலையிலே, உலகத்தை உணர்வதைத்தான், குயில் மாடனொடும் குரங்கனோடும் கொள்ளும் கள்ளக் காதலால் தோன்றும் காட்சிவையம் எனக் காட்டுகிறார் கவிஞர். இறுதி நிலையில் 'நாதம்” ஒளியாகிறது. மனம் ஆத்மாவாகிறது. கவிஞனும் கவிதையும் கலக்கிறார்கள். இந்த நாத, ஒளி இணைப்பு துவக்கத்திலிருந்து குறிப்பிடப்பட்டுள்ளது. கடலலையின் நாதம் மோகனமாஞ் சோதியில் இணைவதை முதலில் குறிப்பதை இங்கு நினைவு கூர்தல் நலம். நாதம், சக்தி; ஒளி, சிவன், நாதம், மனம், ஒளி, நல்ல உயிர்'நான் இந்த 'நான் பதியோடு முழுக்க முழுக்க ஒப்பிடும் நிலையில் இருப்பதாகக் கொள்ளாவிட்டாலும், கீத்சின் 'ஆத்ம உருவாக்கப்பள்ளித் தத்துவத்தோடு (Vale of Soul - making) இயைந்ததாக உள்ளது. கலப்பு, கல்வி முக்தியின் குறியீடாக உள்ளது. மனத்தின் அலைச்சல், கவிஞனின் ஐயமாகிறது. குயில் அல்லது மனம், வேடர்குலத்துப் பெண்ணாக உருவகிக்கப் பட்டிருப்பது 'ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்ததென என்ற சிவஞான போதத்தின் எட்டாம் சூத்திரத்தை நினைவுபடுத்துகின்றது. இங்கும் முனிவர் துணையால், அரசனோடு “அன்னியமின்மை"யை மனக்குயில் உணர்ந்து கொள்கிறது. இப்படி மனத்தின் பால் கலைஞன் மையல் கொண்டு, மனத்துணையாலே இறைமை பெறத்துடிப்பதற்கு ஞானத்திலும் குறிப்புகள் உள்ளன. 140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/142&oldid=817111" இலிருந்து மீள்விக்கப்பட்டது