பக்கம்:பாரதியம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“யானின்றால் தான் நிற்கும். யான் சொன்னால் தான் செல்லும்; மேனி நன்கு தோன்ற அருகினிலே மேவாது; வானிலதுதான் வழிகாட்ட வென்றிடவும் யானிலத்தே நின்றேன் என்ற வரிகளிலே, குயிலும் கவிஞனும் ஒன்றாகிப் பின் இரண்டாவதைக் காணலாம். ஒன்று வான்நோக்கிய தன்மையாகவும் (Heaven - Gazing) மற்றொன்று அதன் மண்நோக்கிய தன்மையாகவும் (Earth - bound) குறிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளலாம். இந்த வரிகளும், குயிற்பாட்டின் வேறுசில இடங்களும் கீத்சின் நைட்டிங்கேல் வாழ்த்துப் பாவோடு மிக நெருங்கிய ஒற்றுமையுடையனவாக உள்ளன. அந்தப் பாடலிலும் கலைஞனும் பறவையும் இறவாமை (Immortality) FT64ëgairsolo (Death conciousness) egy stuuaugögőlsår குறியீடுகளாகக் கொள்ளலாம். அங்கும் கலைஞன் எல்லையற்ற இறவாத அழகுலகத்தை அடைவதற்கு அறிவையும், புலன்களையும் தாண்ட வேண்டியிருக்கிறது. அங்கும் இறுதியில் நிரந்தரத்துவத்தின் நிழலில் கவிஞன் தன் தனித்தன்மையை உணர்கிறார். Forlorn! The very word is like a bell to toll me from thee back to my soul self என்ற வரிகளிலே பாரதி பாடல்களைப் போல் நீ - நான்’ பிரிந்து நிற்கும் நிலை தெரிகிறது. ஆனால் பாரதியிலே பிரிவு மட்டுமன்றி பேதமற்ற நிலையும் காட்டப்படுகிறது. இதைத் தவிர இன்னொரு நிலையிலேயும் இரண்டு பாடல்களுக்கும் மிகுந்த ஒற்றுமை தெரிகிறது. இரண்டிலும் பறவை கற்பனைக்கும் உருவகமாக அமைந்துள்ளது. குயில் மாயா உலகத்தையும், கற்பனையையும் குறிப்பதாகக் கொள்ளலாம். 'கவிதைக்கனிபிழிந்த சாற்றினிலே பண் கூத்து எனுமிவற்றின் சாரமெல்லாம் ஏற்றிய தனோடு, இன்னமுதைத்தான் கலந்து, காதல் வெயிலினிலே காயவைத்த கட்டி’ எனக் குறிப்பிடும் போது, குயில் என்ற குறியீட்டில் காதலும் கவிதையும் இறவாமையின் இரு வெளிப் பாடுகள் - இணைவதைக் காணலாம். சோலை குயில் சொன்ன கதை அத்தனையும் மலையழகின்மயக்கத்தால் வந்த கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டு கொண்டேன்’ என்று பாரதி சொன்னபோது, இது காண்கின்ற காட்சியத்தனையும் உண்மையல்ல - இந்த வையத்துக் காட்சியெல்லாம் பிரம்மத்தின் நிழல்கள் என்ற வேதாந்த விளக்கமாகக் கொள்ளலாம். இவ்வரிகளில் கலைஞர் தம் கற்பனைக் காட்சிகள் உண்மையல்ல என்று கற்பனை உண்மையைச் சாடியதாகவும் 141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/143&oldid=817112" இலிருந்து மீள்விக்கப்பட்டது