பக்கம்:பாரதியம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@staircravitti. 2135Guidi The fancy can cheat so well as she is famed to do, decewing Self என்ற கீத்சின் வரிகளில் ஏறக்குறைய அதே சொற்களும், தொனியும் இருப்பதைப் பார்க்கலாம். இறவாத அழகுலகிலிருந்து நனவுலகுக்குக் கவிஞர் திரும்புகிறார். நான் கண்டதென்ன தரிசனமா, கனவா என்ற வினாக்களுடன் விடு: திரும்புகிறார். இறவாத அழகுலகம் பொய்க் கற்பனை போலிருக்கிறது என்று கூறுகிறபோது அவர் கற்பனையைக் குறை கூறுவது வேண்டுமென்றே, நடிப்புக்குத்தான், நிதர்சன நிலையிலே, தரிசனம் கனவாகிறது. இந்த உலகிலேயே நிரந்தரமும், சாவும் நிரந்தரமாகச்சடுகுடு விளையாடுகின்றன. உண்மையும் கற்பனையும் கலந்துறவாடுகின்றன என்று உலகத்தையே ஒரு நிலையிலே கற்பனையாகவும் மறுநிலையில் உண்மையாகவும் காண்கிறார். எல்லாக் கற்பனை இயற்பாடல்களைப் போல், கீத்சின் இந்தப் ust cosyth, 35Laoanujači &#3 (The power of imagination) gro உரிப்பொருள். கவிஞன் கற்பனையில் உண்மையிருக்கிறது. . கற்பனைதான் உண்மையின் உருவகம். கனவுதான் நனவின் முன்னோடம் என்ற சித்தாந்தம் இங்கு தெளிவாகிறது. பாரதி, உலகமும் மனமும் ஒரு மாயக்குயில் என்ற வேதாந்தத்தைச் சொன்னது அந்த மாயையும் உண்மையின் நிழல்தான் என்பதால்தான். அதைத் தமிழ்க் கற்பனைக் கவிதையோடு இணைத்து, கற்பனைக் கவிதையுலகம் கனவுலகம் என்றாலும் அதுதான் உண்மையுலகம் இல்லை என்பதற்கு என்ன சாட்சி என்பது போல முடிக்கிறார். பாரதியிலும் கீத்சிலும், கனவுலகமும் நனவுலகமும் மாறிமாறிக் காட்டப்பட்டுள்ளன; அவர்கள், இந்த உலகக் கனவைக், கனவுலக மாகக் காட்டியிருக்கிறார்கள். இரு கனவுகளும் ஒருவகை உண்மைதான் எனவும் உணர்த்தியுள்ளார். அங்கே "நைட்டிங்கேல்” கனவுக்கு, கற்பனைக்கு, அழகுக்கு, ஆத்மாவுக்கு உருவகம். இங்கு குயில் கனவுக்கு, தமிழ்க் கற்பனைக்கு, காதலுக்கு, மனத்தினின்று மலரும் ஆத்மாவுக்கு உருவகம். அங்கே பிளேட்டோவின் தத்துவம் நிழலாடுகிறது; இங்கே வேதாந்தமும் சித்தாந்தமும் விளக்க மடைகின்றன. அங்கே இறவாத அழகும் இங்கே இறவாத காதலும் கற்பனையோடு இணைக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் படைப்புச் சக்தியின் வெளிப்பாடாக பாட்டு வருகிறது. கீத்சில் நைட்டிங்கேல் பாட்டில் இன்பம், இறவாமையைக் கவிஞர்க்கு உணர்த்துகிறது. பாரதியில் குயிற்பாட்டு ஆத்மாவின் நிரந்தரத்துவ வேட்கையை நிரந்தரமான தொடர்க்காதலாகக் காட்டுகிறது. மேலை மரபுப்படி 142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/144&oldid=817113" இலிருந்து மீள்விக்கப்பட்டது