பக்கம்:பாரதியம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நைட்டிங்கேலின் பாட்டும் காதல் துன்பத்தோடு தொடர்பானது. அங்கேயும் எப்படி நிறைவேறாகாதலின் கீதம், அழியா.ஆத்மாவுக்கும் கலைக்கும் மூலமாக உள்ளதுபோல் இங்கேயும் குயிலின் பாட்டுக்குப் பின்னணியாக காதற் கதையையும் உள்ளுயிராகத் தத்துவ விளக்கத்தையும் தந்து பாரதி ஒரு புதிய புராணியத்தை (Anew myth of Immortality) உருவாக்கியுள்ளார். அங்கேயும் ஆத்ம இன்ப நிலையிலே - தனது என்ற பேதம் தவிர்த்தது போல் இங்கும் பாட்டு முடியும வரை பாரறியேன், விண்ணறியேன் கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காலறியேன் தன்னையறியேன், தனைப்போலொருத்தரறியேன் பொன்னை நினைத்த குரல், பொங்கிவரும் இன்பமொன்றே என்று கூறும்போது, அந்த எல்லையற்ற இரவாத இன்பநிலையில் பேதமற்றுப் போனதைக் குறிக்கிறார். அனைத்தும் குரலில் ஐக்கியமாகிவிடுகின்றது. மொத்தத்தில் பாரதியின் பறவைக் காதல், அவனது வேதாந்தத்தின் விளைவு. காக்கையும், குருவியும், குயிலும் அவனது நிறைவு வேட்கையையும் சகோதர சம்த்துவக் கனவையும் காட்டுகின்றன. காக்கை, கண்ணனின் கரிய உருவத்தையும், குருவி ஆத்ம விடுதலையையும் குயில், ஆத்மாவின் காதலையும் குறிப்பாக உருவகிக்கின்றன. ஒரு நிலையிலே அவை மானுடத்திலிருந்து வேறுபட்டாலும், அவை, மானுடத்தின் ஆத்மீக நிலையின் கவிஞனின், உருவகங்களாகவும் ஒளிர்கின்றன. இந்தக் குறியீடுகளில் மானுடர் - பறவைச் சங்கமத்தையும் தெய்வீகத்தின் சாதாரண syougits;&pgujuh (The epiphany of the ordinary) 3 or() off முடிகிறது. இயற்கை, இறைமைக்கும் மானுடத்துக்கும் இணைப்பாக இருப்பது போல இவைகளும் ஆத்மாவுக்கும் பரம்பொருளுக்கும் (The soul and the transcendental reality) @ansor&##1&col=aTT55 திகழ்கின்றன. 143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/145&oldid=817114" இலிருந்து மீள்விக்கப்பட்டது