பக்கம்:பாரதியம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டைப் பிரசவம் 潮 ఈ్మ அப்துல் ரகுமான்

  • *

பாரதி! கல்லாய்க் கிடந்த தமிழை உயிர்ப்பித்த பாததுளியே! இதோ! எங்கள் நாவின் அறுவடை! காணிக்கை அல்ல இது; உன்னிடம் கொண்ட கடனுக்குக் கொடுக்கின்ற வட்டி! எங்கள் நான்குகால் கவிதைகளுக்கு நடைவண்டி உன் கவிதை; உன் தீக்குச்சிகளால் எங்கள் திரிகளில் சுடர் மகுடம்! அன்றுஎட்டயபுரத்தில் இரட்டைப் பிரசவம்! நீயும், புதிய தமிழும்! உன் முதல் அழுகையில் உன் சகோதரி சிரித்தாள். இரும்புப் பெட்டிகளில் கிடந்த இலக்கியத்தை ஏழைகளுக்குப் பரிமாறியவன் நீ! 147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/147&oldid=817116" இலிருந்து மீள்விக்கப்பட்டது