பக்கம்:பாரதியம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருட்டு எழுதுகோல்கள் இருட்டைத் தொட்டு எழுதிக் கொண்டிருந்தபோது உன்னிடம்தான் சூரிய மைக்கூடு இருந்தது! எழுத்தாணிகளால் சிலுவையறையப்பட்ட கவிதைக்கு நீதான் மறுவுயிர்ப்பளித்தாய்! சிலர் பாடையாக்கி வைத்திருந்த யாப்பைகனவுகளின் பூவிமானம் ஆக்கியவன் நீதான்! உன் பேனா கிரீடம் கழற்றிய போதெல்லாம் ஆங்கிலேயன் கிரீடம் ஆட்டம் கண்டது! உன் வார்த்தைக் கிரணங்களால் கண் விழித்தவர்கள் தூங்கிக் கிடந்தவர்கள் மட்டுமல்ல செத்துக் கிடந்தவர்களும்தான் இந்த நாட்டின் 'வெண் தளைகளையும் 'வஞ்சித் தளைகளையும் தகர்ப்பதற்காக நீ பாடியபொழுதுதான் உண்மையான கவிதை இலக்கணத்தை நாங்கள் கற்றுக்கொண்டோம்! கவிதைப் பெண்ணின் கையில் அலங்கரிக்கும் அணிகளையல்ல ஆயுதங்களைத் தந்தவன் நீ! 148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/148&oldid=817117" இலிருந்து மீள்விக்கப்பட்டது