பக்கம்:பாரதியம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று நீ அறுத்தது உன் பூணுலை அல்ல; வருணாசிரமத்தின் தாலியை! உன் கவிதையை விட அழகான கவிதை உன் வாழ்க்கை! உன் கவிதைகள் உன் வாழ்க்கையின் வார்த்தை நிழல்கள்! சிலர் பாரிஜாதக் கனவுகள் பார்த்துக் கொண்டிருந்தபோது பருத்திப் பூக்களை நீ பறித்துக் கொண்டிருந்தாய்! நாங்கள் தடுமாறும்போது ஊன்றுகோலாய்அடைக்கலப் புறாக்களுக்கு சிபியின் துலாக்கோலாய்எங்கள் இரும்பைப் பொன்னாக்குவதில் மந்திரக்கோலாய்உன் எழுதுகோலுக்குத்தான் எத்தனை அவதாரங்கள். சொற்கள் உன்னிடம் சுமங்கலி ஆயின, கவிதை உன்னிடம் கவுரவம் பெற்றது தமிழ் உன்னிடம் தன்மானம் பெற்றது நாமோ உன்னிடம் நம்மையே பெற்றோம்! 149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/149&oldid=817118" இலிருந்து மீள்விக்கப்பட்டது