பக்கம்:பாரதியம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாலைப் பிரிவினர் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு இருந்துங்கூடதமது நூல்கள் தொடர்ந்து பிரசுரமாகவில்லையே என்ற ஏக்கம் அவரை ஆட்கொள்கிறது. அதனால் தான் வ.ரா. போன்றவர் களின் வாக்குறுதிகளையெல்லாம் நினைவூட்டுகிறார்; நினைத்தும் பார்க்கிறார். சுமார் பத்தாண்டுகள் புதுச்சேரியில் வனவாஸம் செய்த பாரதி, தமிழகம் திரும்பும்போது, பிரிட்டிஷ் எல்லையை மிதித்ததும் கைது செய்யப்பட்டு, 21 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலையும் அடைகிறார். தாம் வெளியிடப் போகும் பிரசுரங்களைப் போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி, அவருடைய அனுமதி பெற்றுக்கொண்டபிறகு பிரசுரம் செய்வதாக ராஜாங்கத்தாரிடம் உறுதிமொழி எழுதிக் கொடுத்த பாரதி, விடுதலையானவுடன் நேரே கடையம் சென்றடை கிறார். வயிரமுடைய நெஞ்சு வேண்டும் எனப் பாடிய பாரதியார், அப்போதைய தமது குடும்பச் சூழல்களையும் மறந்து, தமது நூல்கள் பிரசுரமாக வேண்டும் என்பதில் தான் தீவிர கவனம் செலுத்துகிறார். ராஜாங்கத்திற்குக் கொடுத்த வாக்குறுதி ஒருபுறமிருக்க தமது நூல்கள் மாசற்றவை என்பதால் அநாவசியமான ஆrேபங் கூறி, தமது செயல்களை அரசு அதிகாரிகள் தடை செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் தமது நூல்கள் பிரசுர முயற்சிகளில் ஈடுபட்டு விடுகிறார், பாரதி. பாரதியார் இம்மாதிரி தீவிர முயற்சிகளில் ஈடுபடக் காரணம் இருக்கத்தான் செய்தது. இதைப் பாரதியார் வாய்மொழியாலே கேட்போம்: "தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நாள்தோறும் தமிழைப் படிக்கின்ற ஆண் - பெண் குழந்தைகள் அதிகப்பட்டுக் கொண்டு வருகிறார்கள்... சரித்திர பூர்வமான என்னுடைய நூல்கள் தமிழ்நாட்டின் புனருத்தாரணத்துக்கு மிகவும் அத்தியாவசிய மானவை. ஏற்கெனவே நான் வெளியிட்டிருக்கிற நூல்களினால் தமிழ்நாட்டில் எனக்கு நிகரில்லாத கீர்த்தி ஏற்பட்டிருக்கிறது” 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/15&oldid=817119" இலிருந்து மீள்விக்கப்பட்டது