பக்கம்:பாரதியம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுனிப் புல் மேயும் வெட்டுக் கிளிகளுக்கு நடுவே அவன் வாழ்க்கை வேதனைகளைக் கிழி கிழி என்று கிழித்த வேங்கைப் புலி தொட்டால் சிணுங்கிகளுக்கு மத்தியில் அவன் விதியின்தூசுகள் தொடமுடியாதபடி நிமிர்ந்த தொடு வானம் ஜோதிப் பிரகாச வைகறைகளின் பிரசவக் கூடமான தொடு வானம் புரட்சி இளஞ் சிவப்புப் பூசிய படைக் கலங்களோடு காலம் கட்டியம் கூற அவன் கவிதைப் பட்டாளம் காலடி எடுத்து வைத்ததும் செய்யுள் கூடுகள் செத்து விழுந்தன... அந்நாளில் 'சின்னச்சங்கரனாய்’ அவனிருந்த அரண்மனைச் சபா மண்டபத்தில் ஏழு பருவப் பெண்களையும் தெருவில் பராக்குப் பார்க்கவிட்ட உலாச் சண்டாளர்கள் விறலிகளின் கொசுவம் பிடித்தபடி மெல்லியல் நாயகிகளின் அல்லிமலர்த் தேக நலத்தை 152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/152&oldid=817122" இலிருந்து மீள்விக்கப்பட்டது