பக்கம்:பாரதியம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருட்டுப் பார்வையால் அளந்து 'து, து என்றிகழ விறலி விடு துாது தந்த பாதகர்கள் சமுதாய சம்பந்த மில்லாத பிரபந்தக் கவிராயர் அவர்களுக்குக் கவிதையே கரணம்போடும் செப்பிடு வித்தை அந்தச் சருகுகளில் குப்பைகளில் உரம் பெற்ற அவனோ கவிதையை செப்பிடு வித்தையாய் மக்கள் நலம் செப்பிடு வித்தையாய் திசைமாற்றிக் கொடுத்த லாவகத் திருப்பம் 象 *్మ• எழு என்று சொல்லவே அவன் எழுத்துக்கள் சீரழிவு செப்பவே அவன் கவிச் சீர்கள் தளைகள் அறுக்கவே கவியடித் தளைகள் அவலக் கவலைகள் அடித்து நொறுக்கவே பாடலின் அடிகள் அவன் அப்படியொரு பட்டறை ஆனவன் பொன்னுக்கு வீங்கி நோயால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவன் காலப் புலவர்கள் எதுகைக்கும் மோனைக்கும் கோழிச் சண்டை 153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/153&oldid=817123" இலிருந்து மீள்விக்கப்பட்டது