பக்கம்:பாரதியம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பமானவை ஆயின. குரல்கள் எல்லாம் போர்ப்பாடல்கள்ஆயின. அடிமைகளாய் இருந்தவர்கள் பறந்தோடும் காலக்குதிரையைக் கட்டி அடக்கிச் சவாரி செய்ய வந்த பாரததேவியின் பட்டாளச்சிப்பாய்கள் ஆயினா விரல்களே ஆயுதங்களாக மாறின. இந்தியர்கள் விழித்தெழுந்தார்கள். அவர்கள் புரட்சி முழக்கங்களால் எட்டுத் திசைகளையும் குலுங்க வைத்தார்கள். இந்தியாவின் மலைமுகடுகளை எல்லாம் தலைநிமிர்ந்து மண்ணில் ஊர்வலம் வந்தது போல் வந்தார்கள். அதுதான் நேரம். அவர்களின் வருக்கைக்காகவே பாரதத்தாய் பயம்கலந்த ஆசையோடு காத்திருந்தாள். இந்தியாவின் எதிரிகள் நகரங்களையும் தெருக்களையும் கும்மிருட்டுகளாலும் கொடுங்காடுகளாலும் நிரப்பினார்கள். ஒரு புனித கலாச்சாரத்தின் பர்ணகசாலையை அவர்கள் , 158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/158&oldid=817128" இலிருந்து மீள்விக்கப்பட்டது