பக்கம்:பாரதியம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம், தம்மைக் குறித்தும், தம் நூல்கள் திறம் குறித்தும் பாரதி கொண்டுள்ள அசையா நம்பிக்கையே அவரைப் பிரசுர முயற்சிகளில் ஈடுபட வைத்தது. இக்காரணம் பற்றியே 1918 டிஸம்பர் 21ஆம் தேதி தமது முதல் பதிப்பாளர். அன்புக்குரிய தம்பி பரலி. சு.நெல்லையப் பருக்குத் தம் நூல்கள் பிரசுரிக்க வேண்டியதன் அவசரத்தை வற்புறுத்திக்கடிதம் எழுதி உடனே கடையத்திற்குப் புறப்பட்டு வந்து சேரும்படி எழுதினார். பாரதியின் கடிதம் கிடைக்கப்பெற்ற நெல்லையப்பர் கடையத்தில் பாரதியைச் சந்திக்கச் சென்றார். ஆனால் பாரதியார் எட்டயபுரம் சென்றுவிட்டதையறிந்த நெல்லையப்பர், தாமும் உடனே எட்டயபுரம் புறப்பட்டுச் சென்று, பாரதியாரை அங்கு சந்தித்து விடுகிறார். பாரதியின் வாக்கை வேத வாக்காகக் கொள்ளும் நெல்லையப்பர் 1919ஆம் ஆண்டிலே முன்னம் வெளியிட்ட பாப்பா பாட்டு, முரசு, நாட்டுப் பாட்டு, கண்ணன் பாட்டு ஆகிய நான்கு நூல்களை மறுபதிப்பாகப் பிரசுரம் செய்தார். மறுபதிப்பு 'நாட்டுப் பாட்டு நூலிலே ஒரு சில புதிய பாடல்களைச் சேர்த்தார். 'கண்ணன் பாட்டு’ நூலிலும் ஒரு சில பாடல்களில் மாற்றம் செய்தும், புதிய தலைப்புடன் கூடிய பாடலை இணைத்தும், மகிரிஷி வ.வெ.லா. ஐயரின் அணிந்துரையுடன் வெளியிட்டார். ஆனால், எந்தவொரு புதிய நூலையும் நெல்லையப்பர் பதிப்பிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதே 1919ஆம் ஆண்டில் தான், இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபையானது பல்வேறு இடங்களில் கூடி நிறைவேற்றிய தீர்மானங்களையும், தலைவர்களின் சொற்பொழிவுகளையும் தொகுத்துத் தமிழாக்கம் செய்ததைப் பாரத ஜன சபை (முதல் பாகம்) என்ற பெயரால் சுதேசமித்தரன் புத்தகாலயப் பிரிவு வெளியிட்டது. இவ்வெளியீடுகள் எல்லாம் பாரதிக்குப் புதிய தெம்பையும் உற்சாகத்தையும் அளித்திருக்க வேண்டும். அதனால் எழுச்சி கொண்ட பாரதி, தமது செட்டி நாட்டு நண்பர் கானாடு காத்தான் வயி.சு.ஷண்முகம் செட்டியாருடைய ஒத்துழைப்புடன் வெளியிட

  • > . . : - - -

இக்கட்டுரையாசிரியர் தொகுத்துள்ள மகாகவி பாரதி நூற்பெயர்க்கோவை நூலுள் 22-23ஆம் பக்கங்களில் இக்கடித வாசகங்களைக் காணலாம். 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/16&oldid=817130" இலிருந்து மீள்விக்கப்பட்டது