பக்கம்:பாரதியம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் காலப் புலவோர் சந்தனச் சொற்களால் சதுராடிக் கொண்டிருந்தபோது, நீகந்தகச் சொற்களை அள்ளி வீசினாய்... உன் கவிதா நெருப்பால் தமிழகமே தீப்பற்றி எரிந்தது. 哆 •్మ• நீ அச்சத்தைப் போக்கி அநீதியை எதிர்த்து ஆண்மையின் வீறுகொண்டு ஆவேசப் புயலாய் வீசியபோது ஆதிக்கச்சருகுகள் ஆகாயத்தில் பறந்தன! 'சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம் - என்று அடிமை இந்தியாவில் நெஞ்சு கொதித்துச் சொன்னாய்... அதையே நாங்கள் சுதந்திர இந்தியாவிலும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்! தீர்க்கதரிசியே! சொந்த சகோதர் துன்பத்தில் வாடக்கண்டும் சிந்தை இரங்காரடி என்று நீ யாரைப் பார்த்துச் சொன்னாய்? Gufff 162

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/162&oldid=817133" இலிருந்து மீள்விக்கப்பட்டது