பக்கம்:பாரதியம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து அடையாளம் காட்டு! முகமூடிகளைக் கிழித்தெறி! 發 *్మ• ஸ்பானியக் கவிஞன் கிரேசியா லோர்க்காவை ஆரஞ்சுப் பழத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றது ஸ்பானிய அரசு... சிலி நாட்டுச் செங்குயில் பாப்லோ நெருடாவை படிப்பறையிலே சுட்டுக் கொன்றது ஆணவ அரசு... ஏஞ்சலா டேவிஸைக் கொலைக்குற்றம் சாட்டிச் சிறையிலடைத்தது அமெரிக்க அரசு... 'நாமார்க்கும் குடியல்லோம்: என்று நிமிர்ந்து நிற்பவர் திருநாவுக்கரசரே யானாலும் சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்யும் அரசுகள் என்பதுதானே சரித்திரம் போதிக்கும் பாடம். நீ இன்று இருந்தால் என்ன ஆகியிருப்பாய் என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன்! 禽 * 163

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/163&oldid=817134" இலிருந்து மீள்விக்கப்பட்டது