பக்கம்:பாரதியம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் ஒரு சமுதாயத்தின் மனசாட்சி! அவன் குரல் சத்தியத்தின் குரல். சத்தியத்திற்கு யாருமிப்போது செவி கொடுப்பதில்லை. சத்தத்திற்கே செவி கொடுக்கிறார்கள்! நீ சத்தியம் பேசியதால் உன்னை ஒட ஒட விரட்டின அதிகாரத்தின் கரங்கள். நீ சொற்சிலம்பம் ஆடாமல், அநியாய ஆட்சிக்குக் காவடிதூக்காமல், சிலேடைச் சொற்களால் சிரிக்க வைக்காமல், இதமான வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்காமல், இதயத்தைத் துளைக்கும் ஈட்டிகள் போலே எடுத்து வீசினாய் உன் கவி ஆயுதத்தை... நாங்கள் மட்டும் வாழைப் பட்டையால் வாள் சண்டை போடவோ? இருட்டில் திரியும் குருட்டுக் கோழிகளாய் கண்டவன் காலில் மிதிபட்டுச்சாகவோ? அநியாயக் கச்சேரிக்குத் தாளங்கள் கொட்டவோ? அபகரப் பாடலுக்கு 164

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/164&oldid=817135" இலிருந்து மீள்விக்கப்பட்டது