பக்கம்:பாரதியம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துகள் ஊதவோ? அக்கிரமத்திற்கு ஆலத்தி எடுக்கவோ? இல்லை புலவனே இல்லை! இனியந்தப் பேடிமை இங்கில்லை என்பதை இன்றே பிரகடனம் எடுத்து எழுகிறோம்! எதிரில் நடக்கும் ஏமாற்று வித்தையை முன்னே நடக்கும் மோடி வித்தையை எற்றி எறிந்திட எழுந்து வருகிறோம்! வீதிக்கு வந்து விமர்சனம் செய்கிறோம்! உனது பாதையில் உனது வெளிச்சத்தில் இருளைக் கொன்று இன்னொளியைக் கொண்டுவர இங்கே நாங்கள் சபதமெடுக்கிறோம். சுதந்திரத்தை நாங்கள் எவரிடமும் மடிப்பிச்சை கேட்கப் போவதில்லை! வருகிறோம்... உன் ஞானரதத்தை எங்கே நிறத்தினாய் பாரதீ? 165

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/165&oldid=817136" இலிருந்து மீள்விக்கப்பட்டது