பக்கம்:பாரதியம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்கலப் பானைகள் சரிந்து விழுந்து உருண்டோடுவதுபோல் அட்டகாசமான சிரிப்பொலிகேட்டு எல்லாரும் திரும்பிப்பார்த்தனர். அவன்தான்அவன் அப்பனுக்குப் பிறந்தான்! - என்று வெடுக்கென்று சொன்னார் பாரதி.

புதுச்சேரி தர்மராஜா கோவில் தெரு பாரதியின் வீடு. இன்றுஎன்ன குழம்பு? என்ன கூட்டு? என்று கேட்டார் பாரதி! முருங்கைக்காய்க் குழம்பு கத்தரிக்காய் கூட்டு என்று புன்னகை முத்திரையைப் பொறித்துச் சொன்னாள் செல்லம்மாள். கத்தரிக்காய்...! முருங்கைக்காய்...! இவற்றைத் தின்றுதின்று தெவிட்டிப் போய்விட்டது என்றார் பாரதி. σή! உங்களுக்குத் தெவிட்டாத உணவு எது? என்று கேட்டார் அருகிருந்த நண்பர். 167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/167&oldid=817138" இலிருந்து மீள்விக்கப்பட்டது